3D பிரிண்டிங் என்றால் என்ன? அதை வைத்து வீடு கூட கட்டலாமா?

3D printing
3D printing

3D பிரிண்டிங், சேர்க்கை உற்பத்தி(Additive Manufacturing) என்றும் அழைக்கப்படுகிறது, இது டிஜிட்டல் மாடல்களில் இருந்து முப்பரிமாண பொருட்களை உருவாக்கும் செயல்முறையாகும். இது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. டிஜிட்டல் மாடல் உருவாக்கம்:

கணினி உதவி வடிவமைப்பு CAD (Computer aided design) மென்பொருளைப் பயன்படுத்தி 3D மாதிரியை வடிவமைப்பதில் செயல்முறை தொடங்குகிறது. இதில் நீங்கள் உருவாக்க விரும்பும் பொருளின் வடிவத்தை கொடுத்தவுடன், இந்த பிரிண்டர் கட்டமைப்பை செயல்படுத்துகிறது.

2. லேயர்-பை-லேயர் கட்டுமானம்:

3டி பிரிண்டிங்கில், பொருள் அடுக்கடுக்காக கட்டமைக்கப்படுகிறது. அதாவது பிரிண்டர் நாம் கொடுத்த டிஜிட்டல் மாதிரியையும் அதில் உபயோகித்துள்ள வடிவமைப்பு விவரக்குறிப்பு அடங்கிய பொருட்களையும் (பிளாஸ்டிக், உலோகம் அல்லது பிசின் போன்றவை) புரிந்து வைத்துக் கொள்கிறது. பின் ஒவ்வொரு அடுக்காக அதன் ஸ்டைலில் இணைகிறது, இறுதியில் படிப்படியாக முழுமையான பொருளை உருவாக்குகிறது.

3. பொருட்களை கையாளும் திறன்:

வெவ்வேறு 3D அச்சிடும் தொழில்நுட்பங்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்துகின்றன. உதாரணத்திற்கு:

Fused Deposition Modeling (FDM):

இது மிகவும் பொதுவான முறையாகும். இது தெர்மோபிளாஸ்டிகை பயன்படுத்துகிறது (ஏபிஎஸ்(ABS) அல்லது பிஎல்ஏ(PLA) போன்றவை. இது பிரிண்ட்டரை (Printer) சூடாக்கி, அடுக்காக அடுக்கி வைக்கிறது.

Stereolithography (SLA):

SLA பிரிண்டர்கள் (printers) திரவ பிசினைப் (Liquid resin) பயன்படுத்துகின்றன அவைகளை இந்த பிரிண்டர் UV ஒளி மூலமாக கடின படுத்துககிறது .

Selective Laser Sintering (SLS):

SLS பிரிண்டர்கள் தூள் பொருட்கள் (நைலான் அல்லது உலோகம் போன்றவை) மற்றும் அந்த துகள்களை ஒன்றாக இணைக்க லேசர் நுட்பத்தை பயன்படுத்துகிறது.

சிக்கலான வடிவங்களை உருவாக்குதல்:

3டி பிரிண்டிங்கின் முக்கிய நன்மைகளில் ஒன்று, பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி உருவாக்குவதற்கு சவாலாக இருக்கும் விஷயங்கள் மற்றும் சிக்கலான வடிவங்களை உருவாக்குவதே இந்த பிரிண்டிங்கின் திறனே. எடுத்துக்காட்டாக, வெற்று பாகங்கள்(Hollow Parts), உள்ளடக்க

கட்டமைப்புகள்(Internal truss structure) மற்றும் சிக்கலான வடிவவியல் ஆகியவை இதன் மூலம் சுலபமாக உருவாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
3D Printing (முப்பரிமாண அச்சிடல்) - பயனும் பயன்பாடும்!
3D printing

4. வீடுகள் மற்றும் கட்டிடங்கள்:

சில நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கட்டிடங்களை கட்டுவதற்கு பெரிய அளவிலான 3D பிரிண்டர்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளன. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்ப்போம்.

  • ஒரு பெரிய 3D பிரிண்டர், பெரும்பாலும் ஒரு ரோபோடிக் கையில்(Robotic Arm) பொருத்தப்பட்டிருக்கும், இது கான்கிரீட் அல்லது பிற கட்டுமானப் பொருட்களை அடுக்குகளாக டெபாசிட் செய்கிறது.

  • பாரம்பரிய கட்டுமான முறைகளை விட இந்த செயல்முறை வேகமானது மற்றும் செலவு குறைந்ததாகும்.

  • இதற்கு சீனா மற்றும் நெதர்லாந்தில் உள்ள 3D-அச்சிடப்பட்ட வீடுகள் உதாரணங்களாகும்.

கான்கிரீட் கலவை மேம்பாடு:

  • கட்டுமான நிறுவனங்கள் ஒரு சிறப்பு 3D அச்சிடக்கூடிய கான்கிரீட் கலவையை உருவாக்குகின்றன.

  • இந்த கலவையானது அச்சிடப்பட்ட(Printed) கட்டமைப்பிற்கான ஆயுள் மற்றும் வலிமையை உறுதி செய்கிறது.

அடுக்கு-அடுக்கு கட்டுமானம்:

  • பிரிண்டர் கட்டமைப்பை அடுக்கு மூலம் உருவாக்குகிறது.

  • செங்குத்து வலுவூட்டலுக்கு தேவையான கம்பிகள் மற்றும் வெல்டிங் செய்யப்பட்ட சப்போர்ட்டுடன், கான்கிரீட் கலவையில் பிரின்டிங் போயிட்டு இருக்கும் நேரத்தில் சேர்க்கப்படுகிறது.

கட்டிடக் குறியீடுகளுடன் இணங்குதல்(Compliance with Building Codes):

  • 3டி அச்சிடப்பட்ட கட்டிடங்கள் உள்ளூர் கட்டிடக் குறியீடுகளுக்கு இணங்க வேண்டும்.

  • உதாரணமாக, சென்னைக்கு அருகில் உள்ள L&Tயின் 3D அச்சிடப்பட்ட கட்டிடம் இந்தியாவின் குறியீடுகளை பின்பற்றித்தான் கட்டியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com