நாம் வசிக்கும் பூமி, சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருவதை நாம் அறிவோம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள குறுகிய தூரம் 90,000,000 கி.மீ. என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதுவே நீள் வட்டப்பாதையில் தூரமாகச் செல்கின்றபோது, இரண்டிற்கும் இடைப்பட்ட தூரம் 152,000,000 கிலோ மீட்டராக உயர்ந்து விடுகிறதாம். அப்படி இரண்டு முறை தூரமாகச் செல்லும் நிகழ்வு ஜனவரி மாதத்திலும், ஜூலையிலும் நிகழ்கிறதாம். ஜூலையில் நிகழும் இதற்குத்தான் அல்பெலியன் என்று பெயரிட்டுள்ளது. ஜனவரி நிகழ்வு பெரிஹெலியன் என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பிரபஞ்சம் எத்தனையோ விந்தைகளையும், வினோதங்களையும் தன் வசத்தே கொண்டுள்ளது. விஞ்ஞானம் அவற்றை ஒவ்வொன்றாக நெருங்கி வருகிறது. இருந்தாலும் இன்னும் நெருங்க வேண்டியது பல இருக்கும் என்றே தோன்றுகிறது.
அல்பெலியன், இந்த வருடம் ஜூலை 4 ந்தேதி காலை 5.27 க்கே தொடங்கி ஆகஸ்ட் 22 ந்தேதி நிறைவடைந்தது.
இந்நிகழ்வின் தாக்கமாக, பூமி குளிராக இருக்குமென்று கூறப்படுகிறது. அதிகக் குளிர் என்று அபத்தமாக சிலர் செய்தி போடுவதை விஞ்ஞானிகள் மறுப்பதும் நினைவு கூரத்தக்கது. குளிர் காரணமாக சளியும், அதனையொட்டிய சில உடல் உபாதைகளும் ஏற்படலாமென்று எச்சரிக்கிறார்கள் விபரமறிந்தோர்.
நாம் நம் அன்றாட வாழ்க்கை முறையை, அதற்கேற்றாற்போல அனுசரித்து வாழ வேண்டுமென்று கூறப்படுகிறது. நாம் நன்றாகத் தூங்க வேண்டுமென்பதற்காக நல்ல பெட்டை வேண்டுமானால் மற்றவர்கள் வாங்கித் தரலாம். ஆனால் நமக்காக, அவர்களால் தூங்க முடியாது. உஷ்ணமோ குளிரோ, மழையோ வெயிலோ, நமது உடம்பு அதற்கேற்றாற்போல் மாறிக்கொள்ளும். நாம் மாற்றிக் கொள்ள வேண்டியது நமது மைன்ட் செட்டைத்தான். அதனை மாற்றிக் கொண்டு அனுபவிப்போம் இயற்கையின் விளையாட்டுக்களை!