குழந்தைகளை எடிட் செய்து பெற்றுக்கொள்ள முடியுமா? மனித இனத்தை அச்சுறுத்தும் ஆராய்ச்சி!

CRISPR-GENE EDITING technology
CRISPR-GENE EDITING technology
Published on

இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரிதான். ஒருவர் மற்றவரைப்போல இருப்பதில்லை. நிறம், உடல், எடை,  உயரம், குணம், நடை, பாவனை, சிந்தனை ஆற்றல், ஆரோக்கியம் என அனைத்திலும் நாம் ஒவ்வொருவருமே முற்றிலும் மாறுபட்டவர்கள் தான். ஒவ்வொருவருமே தனித்துவமானவர்கள் தான்.

இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. இந்த உலகில் பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் இந்த நியதிதான். எந்த இனக்குழுவாக இருந்தாலும் அவற்றில் ஒன்றோடு ஒன்று ஒத்ததாய் இருப்பதில்லை. இவை எல்லாம் இயற்கையின் விதிப்படிதான் படைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கும் மனிதன் இந்த விதியில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சிக்கிறான்.

இதுவரை மரபணு மாற்றம் செய்வது மூலம் காய்கறிகள் மற்றும் விலங்குகளில் புதிய வகைகளை மாற்றியமைத்த மனிதன் இன்று தனது குழந்தைகளையும் தான் விரும்புவது போல வடிமமைத்துக்கொள்ள ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளான். அதற்குப் பெயர் தான் CRISPR-GENE EDITING. மனித உடலின் அடிப்படை DNA. இந்த DNA மூலக்கூறுகளை மாற்றி வடிவமைப்பது தான் இந்த CRISPR-GENE EDITING technology. 

அட என்ன இது? Photo editing போல உள்ளதே என சிந்திக்கிறீர்களா? இந்த கட்டுரையில் CRISPR-GENE EDITING டெக்னாலஜியை பற்றி விரிவாக பார்க்கலாம்.

CRISPR என சொல்லப்படும் Clustered Regularly Interspaced Short Palindromic Repeats என்கிற இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நமது உடலில் இருக்கும் DNA வை எடிட் செய்துகொள்ளலாம். இந்த தொழில்நுட்பம் இதுவரை தாவரங்கள் விலங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது மனிதர்களுக்கும் பயன்படுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. பல கோடி கணக்கிலான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மனித உடலில் அந்த ஒவ்வொரு செல்லுக்குள்ளும் DNA உள்ளது. இந்த DNA-களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மனிதனுக்கு பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்திவிடும்.

இந்த CRISPR தொழில்நுட்பம் என்பது இப்படியான DNA வை எடிட் செய்து மாற்றுவது ஆகும். இதன் மூலம் பல நோய்களை சரி செய்யலாம். ஆனால் இந்த GENE எடிட்டிங் ஒரு நபருக்கு செய்யப்பட்டால், அது அவருக்கு மட்டுமே பயனளிக்கக் கூடியதாக இருக்கும். அது அவரது அடுத்த தலைமுறைக்கு எந்த வகையிலும் கடத்தப்படுவதில்லை.

இதையும் படியுங்கள்:
DEOXYRIBONUCLEIC ACID என்றால் என்ன? அது 'உயிரி ரகசியமாம்'!
CRISPR-GENE EDITING technology

உதாரணமாக வழுக்கை தலை, உடல் பருமன், என சில மரபு வழி கடத்தப்படும் பிரச்சனைகளை இந்த CRISPR மூலம் சரி செய்துகொள்ளலாம். எந்த ஒரு கண்டுபிடிப்பிலும் நன்மை தீமை இரண்டும் கலந்தே இருப்பதைப்போலத் தான் இதிலும் உள்ளது.

இப்படி கருவிலேயே போட்டோ எடிட் செய்வதைப்போல குழந்தைகளையும் GENE EDITING செய்து பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை வந்துவிட்டால் அதை பணம் படைத்தவர்கள் தவறான முறையில் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அழகான, மிகுந்த ஆற்றலும் அறிவும் உள்ள குழந்தைகள் வசதி படைத்தவர்களுக்கு பிறக்கும் போது இயற்கையாக பிறக்கும் மற்ற குழந்தைகளுக்கு அது பெரும் ஆபத்தாகத்தான் முடியும். முடிவில் இயற்கையாக பிறந்தவர்கள் மற்றும் வடிவமைக்கப்பட்டவர்கள் என மனித இனமே இரண்டாக பிரிய நேரிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com