DEOXYRIBONUCLEIC ACID என்றால் என்ன? அது 'உயிரி ரகசியமாம்'!

DNA
DNA

நுண்ணுயிரிகள் முதல் உலகின் மிகப்பெரிய உயிரினம் வரையில் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம் DNA தான். 87 லட்சம் வரையில் இருக்கலாம் என அறிவியலாளர்களால் கணக்கிட்டு சொல்லப்பட்டாலும் தற்போதுவரை 13 லட்சம் உயிரினங்கள் வரை மட்டுமே கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்திலும் ஒன்றை ஒன்று குழுக்களாக தனித்துவப்படுத்தி, அதன் அதன் தன்மை, செயல்பாடுகள் என பிரித்தறிவதற்கு மிக முக்கியமானது இந்த DNA தான்.

பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் 'உயிரி ரகசியம்' தான் இந்த DNA. தந்தையிடமிருந்து ஒன்றும் தாயிடமிருந்து ஒன்றுமாக இணையும் செல்கள் இரண்டு நான்கு என பிரிந்து 10 ட்ரில்லியன் செல்களாக மாறுகின்றன. இப்படி உருவாகும் கோடிக்கணக்கான செல்களில் கண்களுக்கு, மூளைக்கு, செவிகளுக்கு என அனைத்திற்கும் தனித்தனியே தனித்தன்மையுடன் வைகைப்படுத்துவது DEOXYRIBONUCLEIC ACID எனப்படும் இந்த DNA தான்.

இன்னும் எளிதாக சொல்லவேண்டுமென்றால் DNA ஒரு பாடநூல் என்றால் gene-கள் அதற்குள் இருக்கும் பிரிவுகள் போல. உதாரணமாக நமது தலை எங்கு இருக்கவேண்டும், விரல்கள் எப்படி இருக்க வேண்டும், கண்ணின் நிறம் எப்படி இருக்கவேண்டும் போன்ற அனைத்துமே நமது உடலில் gene உருவத்தில் இந்த DNA விற்குள் இருக்கும். கம்ப்யூட்டரில் தரவுகள் சேமித்து வைக்கப்படுவதைப்போலவே ஒரு உரியினத்திற்கு அதன் உடல் உருவானதற்கான தரவுகள் இந்த DNA விற்குள் இருக்கும்.

நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் DNA ஒரு முறுக்கப்பட்ட சிப்ஸ் வடிவத்தில் இருக்கும். இந்த DNA  Adenine (A), Thymine (T), Guanine (G), Cytosine (C) ஆகிய மூலக்கூறுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும். இதில் A எப்போதும் T உடனும்,  C எப்போதும் G உடனும் தான் இணைக்கப்பட்டிருக்கும். நமது உடலின் அனைத்து ஜெனிடிக் தரவுகளும் இதில் தான் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு செல்லுக்குள்ளும் சுருண்டு இருக்கும் ஒரு DNA வை எடுத்து நீட்டினால் அது 2 மீட்டர் வரை நீளமுள்ளதாக இருக்கும். இவ்வளவு நீளமுள்ளதாக இருக்கும் DNA கண்ணுக்கே தெரியாத 0.09 micro மீட்டர் உள்ள செல்லுக்குள் அடங்கியுள்ளது.

ஒரு செல்லுக்குள் இருக்கும் DNA இவ்வளவு பெரியது என்றால் நமது உடலில் இருக்கும் 10 த்ரில்லிங் செல்களில் இருக்கும் DNA வை வெளியில் எடுத்து பிரித்தால் அதன் நீளத்தை நினைத்துப்பாருங்கள். எப்போதும் இந்த ATCG ஆகிய நான்கு கூறுகளும் ATG, GTA, CGT, CAG என்பது போல மூன்று மூன்றாக இணைந்து தான் நமது உடலில் தரவுகளாக சேமித்துவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
செல்பி புகைப்படங்கள் வாயிலாக உங்களது கைரேகை திருடப்படலாம்… ஜாக்கிரதை! 
DNA

இந்த உலகில் இருக்கும் அனைத்து மனிதர்களிலும் பார்க்கும்போது இந்த DNA 99.9% ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மீதமுள்ள 0.1% DNA தான் நமது தோற்றம், உயரம், நிறம், பண்புகள் ஆகியவற்றை எல்லாம் நிர்ணயிக்கிறது.

நமது முன்னோர்கள் பற்றிய வரலாறு தரவுகளாக இந்த DNA விற்குள் தான் அடங்கியிருக்கின்றன. ஒரு மனிதனுக்குள் இருக்கும் DNA வின் தொடர்பு என்பது அவரின் கடந்த 14 தலைமுறை மூதாதையர்களின் தாக்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பிறக்கும் குழந்தைகள் மரபு வழி நோய்களை கொண்டிருப்பதும், குடும்பத்து உறுப்பினரின் சாயலை ஓத்திருப்பதும் நிகழ்கிறது.

1990-ல் அமெரிக்க அரசாங்கம் மனித DNA பற்றி ஆராய எடுத்துக்கொண்ட ஆராய்ச்சி (Human Genom Project) என்பது 13 வருடங்களாக நடந்தது. மேலும் இதற்காக இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 24000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இயற்கையின் அதிசயங்கள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் செல்களுக்குள்ளேயே அடங்கியிருக்கிறது என்பது தான் இந்த DNA எனும் ஆச்சரியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com