Email மார்க்கெட்டிங் என்றால் என்ன?.. அதன் எதிர்காலம்!

What is Email Marketing?
What is Email Marketing?
Published on

இன்றைய டிஜிட்டல் தகவல் தொடர்பு காலத்தில் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் என்பது வணிகங்கள் தங்கள் கஸ்டமர்கலுடன் இணைவதற்கும், உறவுகளை உருவாக்குவதற்கும், மாற்றங்களைத் தூண்டுவதற்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது. நவீன காலத்து சந்தைப்படுத்தும் யுக்திகளுடன் தனிநபர்களின் இன்பாக்ஸுக்கு நேரடியாக செய்திகளை அனுப்பி, அவர்களை நம் பக்கம் ஈர்க்க முடியும். சரி வாருங்கள் இப்பதிவில் இமெயில் மார்க்கெட்டிங் மற்றும் அதன் எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்வோம். 

இமெயில் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

இமெயில் மார்க்கெட்டிங் என்பது செய்திகள், நியூஸ் லெட்டர் அல்லது விளம்பர உள்ளடக்கத்தை பல நபர்களுக்கு ஒரே சமயத்தில் மின்னஞ்சல் மூலம் அனுப்புவதாகும். இது வணிகங்கள் தங்கள் டார்கெட் ஆடியன்ஸை நேரடியாக அடைய அனுமதிக்கிறது. 

இமெயில் மார்க்கெட்டிங் நன்மைகள்: 

  • பாரம்பரிய மார்க்கெட்டிங் முறைகளுடன் ஒப்பிடும்போது இமெயில் மார்க்கெட்டிங் விலை மலிவானது. இது அனைத்து அளவிலான வணிகங்களும் அணுகக் கூடியதாக உள்ளது. 

  • குறிப்பிட்ட தனிநபர் எதை விரும்புகிறார் என்பதை அறிந்து அவர்களுக்கு எத்தகைய விளம்பரங்களை கொடுக்கலாம் என்பதை மின்னஞ்சல் மார்க்கெட்டிங் மூலமாக செய்ய முடியும். 

  • முறையான மின்னஞ்சல்களை அனுப்புவது மூலமாக வணிகங்கள் தங்கள் ஆடியன்ஸுடன் முறையான உறவு முறையுடன் இருப்பதை ஊக்குவிக்கிறது. 

  • தானியங்கு கருவிகளின் உதவியுடன் ஒரே சமயத்தில் மின்னஞ்சல்களை பல பயனர்களுக்கு அனுப்ப முடியும். இதன் மூலமாக நேரமும் பணமும் மிச்சமாகிறது. 

இமெயில் மார்க்கெட்டிங்-ன் எதிர்காலம்:

மின்னஞ்சல் என்பது எல்லா காலத்திலும் அனைவருமே பயன்படுத்தும் ஒன்றாக இருந்துவருகிறது. எனவே எதிர்காலத்தில் மின்னஞ்சலை பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்யும் விதமானது முற்றிலும் மாறியிருக்குமே தவிர, இல்லாமல் போய்விடும் என சொல்ல முடியாது. 

ஏஐ தொழில் நுட்பங்களின் வளர்ச்சியால், மின்னஞ்சல் மார்க்கெட்டிங் முறையானது அனைத்தும் ஆட்டோமேஷன் செய்யப்பட்டு, சரியான டார்கெட் ஆடியன்ஸை மேலும் துல்லியமாகக் கண்டறிந்து மார்க்கெட்டிங் செய்யும் நிலைமை ஏற்படலாம். 

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் வெப்பத்தைத் தணிக்கும் வழிகள்! 
What is Email Marketing?

குறிப்பாக பயனர்களின் ரிவ்யூ போன்றவற்றை இமெயில் வழியாக தெரியப்படுத்தி, வணிகங்கள் தங்களின் ப்ராடக்டுகளை சிறப்பான முறையில் விளம்பரப்படுத்த, ஈமெயில் மார்க்கெட்டிங் பல வழிகளில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே நீங்கள் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறீர்கள் என்றால், இமெயில் மார்க்கெட்டிங் முறைகளைப் பற்றி அறிந்து கொண்டு, அதை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மேலும் வணிகங்களும் இவற்றின் ஆற்றலைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்வது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com