
ஆப்பிள் ஐபோன் என்பதே ஒரு அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்டது. ரோல்ஸ்ராய்ஸ் கார் , ரோலக்ஸ் வாட்ச் போல இதுவும் ஒரு கெளரவத்தின் அடையாளமாக உள்ளது. ஆனாலும் ஐபோன்கள் நடுத்தர வர்க்க மக்களும் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒரு முறை ஐபோன் பயன்படுத்துபவர்கள் தொடர்ச்சியாக ஐபோன்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆரம்ப காலத்தில் ஆப் அப்டேட்ஸ் பிரச்சனைகள் , பல ஆப்களை இன்ஸ்டால் செய்ய முடியாத பிரச்சனை என பல பின்னடைவுகள் இருந்தாலும் ஆப்பிள் என்ற ஒரு பிராண்ட் அடையாளத்திற்காக அதன் வாடிக்கையாளர்கள் அதை எல்லாம் தாங்கிக் கொண்டனர்.
பின்னால் ஐபோன் நிறுவனமும் இறங்கி வந்து பல ஆப்களை இன்ஸ்டால் செய்ய, தன் கதவுகளை திறந்து விட்டதும் ஐ lபோன் விற்பனையும் அதிகரித்தது. பெரும்பாலான ஐபோன் வாடிக்கையாளர்கள் தங்களது போன்களை பாக்கெட்டுகளில் வைப்பதில்லை , எப்போதும் ஆப்பிள் சின்னம் தெரியும் வகையில் தங்களது கைகளில் பிடித்து இருப்பர். தற்போது ஐபோன் வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐ போன் 17 இந்திய சந்தையில் வர உள்ளது.
ஐபோன் 17 சிறப்பம்சங்கள்(iPhone specifications):
ஆப்பிள் நிறுவனம் தனது ஐ போன் 17 வது தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ 17 வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், ஐபோன் ஏர் மாடல் ஆகிய நான்கு மாடல்களை சந்தைப் படுத்தியுள்ளது. இதில் முதன்மையாக ஐ போன் 17 இன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
ஐபோன் 17 இல் மிகவும் சிறப்பு வாய்ந்த 48 MP பியூஷன் வைட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 18 MP திறன் கொண்ட செல்ஃபி கேமரா உள்ளது.இது வரை வெளியிடப்பட்ட ஐபோன் களில் இதுவே அதிகபட்ச ரிசல்யூசனை கொண்டது.
மெல்லிய பார்டர்கள் மற்றும் முன்புறத்தில் செராமிக் ஷீல்ட் 2 போன்ற வலிமையாக பொருட்களுடன் வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே 15.93 செ.மீ (6.3″) அளவில் பொருத்தப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அதிக தெளிவு திறனும் பிரகாசமும் கொண்ட வகையில் இருக்கிறது.
மேலும் 120Hz வரை தகவமைப்பு புதுப்பிப்பு வீதம் (Refresh Rate) கேம்கள் விளையாட அதிவேக பயன்பாட்டை தருகிறது. நீடித்த பாட்டரி திறன் ஐபோன் வாடிக்கையாளருக்கு நிம்மதியை தரும். 48W சார்ஜரில் வெறும் 20 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால் 50% சார்ஜ் ஏறிவிடும் என்பது இதன் சிறப்பு. முழு சார்ஜில் 30 மணிநேரம் வரை வீடியோ பார்க்க முடியும். இதன் மெமரி 256 GB/512GB ஆகவும் ரேம் மெமரி 8 GB ஆகவும் உள்ளது.
ஐபோன் 17 VS முந்தைய மாடல்கள்:
ஐபோன் 17 அதன் முந்தைய மாடலான 16 ஐ விட பெரிய திரையை கொண்டுள்ளது , மேலும் A19 சிப் மூலம் அதிவேகமாக இயங்கக் கூடியது. 8 மணி நேரம் அதிகம் இயங்கும் பேட்டரி திறனைக் ஐபோன் 17 கொண்டிருக்கிறது. கேமராவை பொறுத்த வரையில் முந்தைய அனைத்து ஐபோன்களையும் விட சிறந்ததாக இருக்கும். ஐபோன் 16 மாடலில் 48MP கேமரா இருந்தாலும் இது மேம்படுத்தப்பட்ட பியூசன் வகையினை சேர்ந்தது. அதி வேக சார்ஜிங் திறனின் அனைத்து மாடல்களையும் விட இது மேம்பட்டது.
இந்தியாவில் ஐ போன் 17 விலை (I phone 17 prices in India)
இந்தியாவில் ஐபோன் 17, 256 GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் அடிப்படை விலை ₹82900 துவங்குகிறது , இதே மாடலில் 512 GB ஸ்டோரேஜ் திறன் கொண்டதன் விலை ₹1,02,900 லிருந்து துவங்குகிறது. இந்த விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம். அமெரிக்கா , கனடா , துபாயில் இந்தியாவை விட மலிவான விலையில் ஐ போன் 17 கிடைக்கும்.
ஐபோன் 17 ஐ எங்கே வாங்குவது? (Where can I buy iPhone 17)
வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் விற்பனை துவங்குகிறது. இந்த போனை அனைத்து ஐபோன் ஸ்டோர்களிலும் வாங்கலாம். ஒரு சில நாட்களில் மற்ற செல்போன் கடைகள் மற்றும் ஈ காமர்ஸ் வலைத்தளங்களிலும் விற்பனைக்கு வர உள்ளது.