Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

Direct-to-Cell
Direct-to-Cell
Published on

பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்கள், தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்யாவை நோக்கி வேகமாக நகரும் பூமியின் காந்த வட துருவம், தொலைத்தொடர்புத் துறையில் புதிய சவால்களை எழுப்பியுள்ள நிலையில், ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்த சவாலுக்கு தீர்வாக புதிய நேரடி-செல் செயற்கைக்கோள் இணைப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டார்லிங்கின் Direct-to-Cell தொழில்நுட்பம் என்றால் என்ன?

பொதுவாக, நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் செல் கோபுரங்களுடன் இணைந்து செயல்படும். ஆனால், ஸ்டார்லிங்கின் Direct-to-Cell தொழில்நுட்பம் இந்த முறையை முற்றிலும் மாற்றி அமைக்கிறது. இதன் மூலம் நம்முடைய ஸ்மார்ட்போன்கள் நேரடியாக செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்படும். இதற்கு நாம் கூடுதலாக எந்தவிதமான சிறப்பு வன்பொருளையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் போதுமானதாக இருக்கும்.

இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • இந்த தொழில்நுட்பம் மூலம், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இணையத்தை அணுக முடியும். குறிப்பாக, கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள் போன்ற செல் கோபுரம் சிக்னல் கிடைக்காத பகுதிகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • இயற்கை சீற்றங்கள், போர்கள் போன்ற அவசர காலங்களில் நிலையான தொடர்பு முறைகள் தடைபடும் போது, ஸ்டார்லிங்கின் Direct-to-Cell தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

  • இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் பல கோடி சாதனங்களை இணையத்துடன் இணைக்க முடியும். ஸ்டார்லிங்கின் Direct-to-Cell தொழில்நுட்பம் IoT இணைப்பை மேலும் விரிவுபடுத்தும். விவசாயம், தளவாடங்கள், தொலைநிலை கண்காணிப்பு போன்ற துறைகளில் இந்த தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

  • ஸ்டார்லிங்க் பயனர்கள் 250-350 Mbps வேகத்தில் இணையத்தை அனுபவிக்க முடியும். விரைவில் இந்த வேகம் 2Gbps ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஸ்டார்லிங்க் நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் இந்த தொழில்நுட்பத்தை உலகளாவிய அளவில் பரவலாக்க முடியும்.

  • ஸ்டார்லிங்கின் Direct-to-Cell தொழில்நுட்பம் உலகின் பல பகுதிகளில் இன்னும் இணைய வசதி இல்லாத பகுதிகளில் வாழும் மக்களையும் இணையத்துடன் இணைக்கும். 

பூமியின் காந்தப்புலம் சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்த காந்தப்புலத்தின் வட துருவம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், சமீப காலமாக இது வழக்கத்தை விட வேகமாக நகர்ந்து வருகிறது. இது பல தொழில்நுட்ப சாதனங்கள், விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் தொடர்புகள் போன்றவற்றை பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
LightSpray தொழில்நுட்பம்: 6 நிமிடத்தில் தயாரிக்கப்படும் ஷூக்கள்!
Direct-to-Cell

ஸ்டார்லிங்க் தொழில்நுட்பம் எவ்வாறு இந்த சவாலுக்கு தீர்வு காணும்?

ஸ்டார்லிங்கின் Direct-to-Cell தொழில்நுட்பம் பூமியின் காந்தப்புல மாற்றங்கள் காரணமாக ஏற்படும் தொடர்பு பிரச்சினைகளை சமாளிக்க உதவும். ஏனெனில், இந்த தொழில்நுட்பம் நிலையான செல் கோபுரங்களை நம்பியிருப்பதில்லை. செயற்கைக்கோள்கள் மூலம் நேரடியாக இணையத்தை வழங்குவதால், பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்த தொழில்நுட்பத்தை பெரிதாக பாதிக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com