செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உலகெங்கிலும் பரவலாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மனித வாழ்க்கையை எளிமைப்படுத்தி, பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது சில நிறுவனங்களுக்கு புதிய சவால்களை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக, இணையத் தேடலின் முன்னோடியாக விளங்கும் கூகுள் நிறுவனத்திற்கு ஏஐ தொழிற்பம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக உள்ளது. இதன் மூலம், மிகவும் துல்லியமான தகவல்களை விரைவாகக் கண்டறிய முடியும். இதனால், பயனர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை நேரடியாக AI அடிப்படையிலான தளங்களில் இருந்து பெறத் தொடங்கியுள்ளனர். இது google போன்ற பாரம்பரிய தேடுபொறிகளின் பயன்பாட்டை குறைக்கக்கூடும்.
கூகுளின் தற்போதைய நிலை: Google நிறுவனம் இணையத் தேடலில் நீண்ட காலமாக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வைத்துள்ளது. ஆனால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வருகையால் இந்த ஆதிக்கம் குறைந்துவிடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. பல புதிய நிறுவனங்கள் AI அடிப்படையிலான தேடுப்பொறிகளை உருவாக்கி வருகின்றனர். இவை பயன்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்கி google-இன் சந்தை மதிப்பை பறிக்க முயற்சிக்கின்றன.
Google-க்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்:
AI அடிப்படையிலான தேடுபொறிகள் பயனர்களுக்கு மிகவும் துல்லியமான முடிவுகளை வழங்கும். இது google-ன் தேடுபொறி சந்தையில் உள்ள ஆதிக்கத்தை குறைத்து போட்டியை அதிகரிக்கும். மேலும், இவை தவறான தகவல்களை பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், இது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி கூகுளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும்.
கூகுள் நிறுவனம் இதுவரை தங்களுக்கென சிறப்பான AI தொழில்நுட்பத்தை உருவாக்காமல் இருப்பதற்குக் காரணம், கூகுளின் மதிப்பு குறைந்துபோகும் என்பதால்தான். ஏனெனில், மக்கள் அதிகமாக AI தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டால், கூகுள் நிறுவனத்திற்கு, கூகுள் தேடுபொறி மூலம் கிடைக்கும் வருவாய் குறையும். கூகுள் நிறுவனத்திற்கு விளம்பர வருவாய் அதிகம் என்பதால், அதன் பயனர்கள் குறைந்துவிட்டால், அந்நிறுவனம் பெறும் இழப்பை சந்திக்கும்.
இதன் காரணமாகவே AI தொழில்நுட்பம் Google நிறுவனத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஆனால், கூகுள் தனது புதிய அம்சங்கள் வாயிலாக இந்த சவால்களை சமாளித்து, தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ளும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.