பூமி சுழல்வது நின்றால் மனிதர்களின் கதி என்ன? அறிவியலின் அதிரடி விளக்கம்!

Earth rotation and core of the earth
Earth rotation
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on

பூமி சுற்றும் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் சுற்றும் பூமி என்றாவது ஒருநாள் நின்று விடுமோ? என்ற கேள்வி நமக்குள் எழும். அதற்கான விடை மற்றும் குன்றுகளும், மலைகளும், எரிமலைகளும், பாறைகளும் எப்படி உருவாகின்றன. இதற்கெல்லாம் காரணமாக இருப்பது என்ன? என்பதை இப்பதிவில் காண்போம்.

சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள ஈர்ப்பு விசையால் பூமி சுற்றும் வேகம்(Earth rotation) குறைந்து கொண்டிருக்கிறது. நிலா தன்னைத்தானே சுற்றுவதற்கும் பூமியை சுற்றுவதற்கும் ஒரே நேரம்தான் ஆகும். நிலாவும் ஒரு காலத்தில் தன்னைத்தானே அதிக வேகத்துடன் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது ஈர்ப்பு விசை காரணமாக வேகம் குறைந்து விட்டது. புதன் கிரகத்திலும் இதே மாதிரி தான் புதன் கிரகத்தின் வேகமும். ஆனால், பூமி சூரியனிடம் இருந்து வெகு தூரத்தில் இருப்பதோடு அதிக எடையுடன் இருப்பதாலும் பூமி என்றாவது ஒருநாள் நின்று விடுமோ என்று பயப்படத் தேவையில்லை.

இரும்பாலும், நிக்கலாலும் ஆனது தான் பூமியின் உள்ளகம். அதன் உட்பகுதி திடப்பொருளாகவும் வெளிப்பகுதி திரவமாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் மேல் ஓடும் குளிர்ந்து உறைந்து போய்விட்டது. அதுதான் இப்போது நாம் பார்க்கும் பாறைகளும், மலைகளும் குன்றுகளும். பூமியின் உள்ளகத்தைச் சுற்றி சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் பருமன் உள்ள மேண்டில் அடுக்கு இருக்கிறது. அதன் மேற்பரப்பிலேயே பூமியின் மேல் ஒரு கிரஸ்டு மிதந்துக் கொண்டிருக்கிறது. அந்த மேலோட்டின் பலம் கொண்ட சில பகுதிகளில் விரிசல் ஏற்படும் அவற்றில் அவ்வப்போது பீறிட்டு எழும் நெருப்பு பிழம்புகள் தான் எரிமலை.

பூமி உருண்டையாகத் தானே இருக்கிறது. அதை துளையிட முடியுமா? என்றால் முடியாது. வெவ்வேறு நாடு உள்ளது. பூமியின் மையப்பகுதியில் வெப்பக் குழம்பு பீறிட்டு வெளிக்கிழம்பும். அது பூமியின் மேற்பரப்பில் வழிந்தோடி பரவிக் குளிரும். இதனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் மாண்டு போகும். அதனால் பூமியின் ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்துக்கு துளையிடுவது சாத்தியம் இல்லை.

மேல் நோக்கி செல்லும் புகையை பூமி ஏன் ஈர்ப்பதில்லை என்றால் புவிஈர்ப்பு விசையால்தான் புகை மேலே செல்கிறது. காற்றின் அடர்த்தியை விட புகையின் அடர்த்தி குறைவு. அதனால் புகையை விட காற்றின் மீது புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இருட்டுக்கு இனி வேலையே இல்லை... இரவில் நடமாட புதிய கண்கள் ரெடி!
Earth rotation and core of the earth

இதனால் காற்று கீழிறங்க புகை மேல் நோக்கி செல்கிறது. நீராவியைச் சுமந்து லேசான காற்று மேலே செல்வதும் மேகம் உருவாகுவதும் இப்படித்தான். தண்ணீரில் அமிழ்த்திய கார்க் மிதப்பதும் இப்படித்தான். புவியீர்ப்பு விசை இல்லை என்றால் புகை மேலே செல்லாது. ஆக புவியீர்ப்பு விசையின் காரணமாகத்தான் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுகிறது என்பதே இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் உண்மை.

logo
Kalki Online
kalkionline.com