மனிதர்களின் அளவுக்கு சிலந்திகள் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா? 

spiders
what would happen if spiders were the size of humans?

சிலந்திகள் பூமியில் உள்ள மிகவும் அச்சுறுத்தும் உயிரினங்களில் ஒன்றாகும். அண்டார்டிகாவைத் தவிர கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா கண்டங்களிலும் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் சிலந்திகள் காணப்படுகின்றன. சிலந்திகள் சிறியதாக இருந்தாலும் அவற்றின் விஷம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஒருவேளை சிலந்திகள் மனிதர்களின் அளவுக்கு பெரியதாக இருந்தால் என்ன ஆகும் தெரியுமா? அவ்வாறு சிந்தித்துப் பார்க்கவே பயங்கரமாக இருந்தாலும், உண்மையிலேயே இது ஒரு சுவாரசியமான கேள்வி. 

மனிதர்களின் அளவுக்கு சிலந்திகள் இருந்தால் முதலில் அவற்றின் வலைகள் பெரியதாகவும், மிகவும் வலுவானதாகவும் இருக்கும். அவை மரங்கள், கட்டிடங்கள், சாலைகள் என எல்லா இடங்களிலும் இடையூறுகளை ஏற்படுத்தலாம். இது தவிர அவற்றைப் பயன்படுத்தி மனிதர்களையும் விலங்குகளையும்கூட அவை பிடித்து உண்ணலாம். இதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாதபடி மக்கள் மாட்டிக்கொள்வார்கள். 

சிறிதாக இருக்கும் சிலந்தியின் விஷமே மனிதர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்போது, பெரிய அளவில் இருக்கும் சிலந்திகளின் விஷம் மனிதனை என்ன செய்யும் என சிந்தித்து பாருங்கள். ஒரு சிலந்தி மனிதனைக் கடித்தால் அது கடுமையான பாதிப்பு அல்லது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும். 

சிலந்திகள் பின்னும் வலையில் சிறிய பூச்சிகள் மாட்டி அவற்றுக்கு உணவாவது போல, தற்போது அவற்றில் பெரிய அளவிலான விலங்குகளும் மனிதர்களும் மாட்டி சிலந்திக்கு உணவாவார்கள். இதுவரை சிலந்தியை வேட்டையாடிய உயிரினங்கள் சிலந்தியால் வேட்டையாடப்படும். இதன் காரணமாக உணவுச் சங்கிலியில் சிலந்திகள் ஆதிக்கம் செலுத்தும். தன்னைவிட சிறிய அளவில் இருக்கும் எல்லாவற்றையும் வேட்டையாடி உண்ணும் விளங்காக சிலந்திகள் மாறிவிடும். எனவே மனிதர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டியிருக்கும். உணவு மற்றும் பாதுகாப்பான இடங்களைத் தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள். 

Spider Web
Spider Web

மனிதர்கள் சிலந்திகளுக்கு பயந்து வாழவேண்டிய சூழல் ஏற்படும். எங்கு சென்றாலும் சிலந்திகள் நம்மைத் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சுத்துடனே செல்ல நேரிடும். சிலந்திகள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி அவர்களின் வாழ்க்கை முறையே முற்றிலுமாக மாறிவிடும். இதற்காக உயரமான கட்டிடங்கள், பாதுகாப்பான வீடுகள் கட்டப்பட வேண்டிய தேவை ஏற்படும். 

மனிதர்கள் சிலந்திகளை எதிர்த்துப் போராட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கலாம். அவற்றை முழுமையாக அழிப்பதற்கு ஆயுதங்கள், ரோபோக்கள், ரசாயன குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொல்ல முயற்சிப்பார்கள். இதில் மனிதர்களும் கொல்லப்படுவார்கள். 

இதையும் படியுங்கள்:
Funnel Web Spider: உலகிலேயே ஆபத்தான சிலந்தி!
spiders

மனிதர்களின் அளவுக்கு சிலந்திகள் இருந்தால் என்ன ஆகும் என்பது ஒரு கற்பனை சித்தரிப்புதான் என்றாலும், அது உண்மையாக மாறினால் மனித குலத்திற்கு பெரும் சவாலாக இருக்கும். இது இயற்கை சமநிலையை முற்றிலுமாக மாற்றி உயிரினங்கள் மற்றும் மனிதர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்துகொண்டு, மனிதர்கள் இயற்கையிடம் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com