அச்சச்சோ! ஒருவேளை பூமியின் நடுப்பகுதி குளிர்ந்துவிட்டால் என்ன ஆகும்? 

Earth
what would happen if the core of the Earth cooled?
Published on

பூமியின் நடுப்பகுதி என்பது கொதிக்கும் இரும்பு மற்றும் நிக்கலால் ஆன ஒரு திடமான வெப்பக் கருவறை போன்றது. இதுவே பூமியின் காந்தப்புலத்திற்கு காரணமாக அமைந்து டெக்கானிக் தகடுகளை நகர்த்துகிறது. ஒருவேளை பூமியின் நடுப்பகுதி குளிர்ந்துவிட்டால் என்ன ஆகும்? என்கிற கேள்வி பல நூற்றாண்டுகளாகவே விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு வருகிறது. இந்தப் பதிவில் பூமியின் நடுப்பகுதி குளிர்வதால் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகளைப் பார்க்கலாம். 

காந்தப்புல இழப்பு: பூமியின் காந்தப்புலம் சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ஒருவேளை நடுப்பகுதி குளிர்ச்சியானால் காந்தப்புலம் பலவீனமடைந்து அல்லது முழுமையாக இல்லாமல் போய், சூரிய ஒளியால் புற்றுநோய் மற்றும் பிற சுகாதார பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

டெக்கானிக் தகடு இயக்கம் குறைவு: டெக்கானிக் தகடுகள் என்பவை பூமியின் மேற்பரப்பில் உள்ள துண்டுகளாகும். அவை நடுப்பகுதியின் வெப்பத்தால் இயக்கப்படுகின்றன. ஒருவேளை பூமியின் நடுப்பகுதி குளிர்ந்து போனால், தகடுகளின் நகர்தல் குறைந்து எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கங்கள் குறைவதற்கான வாய்ப்புள்ளது. 

காலநிலை மாற்றம்: பூமியின் நடுப்பகுதியில் இருக்கும் வெப்பம் அதன் மேற்பரப்பை சூடாக்குகிறது. ஒருவேளை பூமியில் இந்த வெப்பம் இல்லை என்றால், பூமி முழுவதும் குளிர்ச்சியடைந்து பனிகளால் சூழப்படலாம். இது உயிரினங்களின் வாழ்க்கையை கடினமாக்கிவிடும். 

பூமி சுழற்சியில் மாற்றம்: பூமியின் நடுப்பகுதியில் உள்ள நெருப்புக் குழம்பு பூமியின் சுழற்சியில் பங்களிக்கிறது. ஒருவேளை அவை குளிர்ந்து பறையாக மாறினால், சுழற்சி வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஒரு நாளின் நீளமானது முற்றிலுமாக மாறிவிடும். 

இதையும் படியுங்கள்:
பூமி உளுந்து வடை வடிவத்தில் இருந்தால் என்ன ஆகும்? அடக்கடவுளே! 
Earth

நடுப்பகுதி குளிர்வது சாத்தியமா? 

பூமியின் நடுப்பகுதி குளிர்வது என்பது ஒரு சாத்தியமில்லாத நிகழ்வாகும். அது மிகவும் ஆழமான பகுதியில் அமைந்துள்ளது. எனவே அது தன் வெப்பத்தை இழக்க பல மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே விஞ்ஞானிகள் பூமியின் நடுப்பகுதியின் செயல்பாட்டை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த ஆய்வு மூலமாக எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்பது பற்றிய நுண்ணறிவு நமக்குக் கிடைக்கிறது. 

எனவே, பூமியின் நடுப்பகுதி குளிர்வது என்பது ஒரு கற்பனையான கருத்தாகும். இது நடந்தால் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பேரழிவு விளைவை ஏற்படுத்தும். நம் பூமியின் நடுப்பகுதி பற்றி மேலும் பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்பதை காலப்போக்கில் தெரியப்படுத்துவார்கள் என நம்புவோம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com