மனித உடல் என்பது ஒரு அற்புதமான படைப்பு. நமது உடலில் ஒவ்வொரு அணுவிலும் DNA (Deoxyribonucleic Acid) என்ற மூலக்கூறு உள்ளது. இது நமது உடல் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான மரபணு குறியீட்டைக் கொண்டுள்ளது. DNA இல்லாமல் ஒரு உயிரினத்தால் உயிர் வாழ முடியாது. இந்த பதிவில் நமது உடலில் திடீரென DNA காணாமல் போனால் என்ன ஆகும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
DNA காணாமல் போனால் நடக்கும் விளைவுகள்:
DNA இல்லாமல் செல்கள் தங்களைத் தாங்களே சரி செய்யவோ அல்லது புதிய செல்களை உருவாக்குவோ முடியாது. இதன் விளைவாக நமது உடலில் இருக்கும் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கத் தொடங்கும்.
DNA இல்லாமல் உடலில் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படும். இதயம் துடிப்பதை நிறுத்தி, நுரையீரல் மற்றும் மூளை செயல்படாமல் போகும். DNA இல்லாமல் ஒரு உயிரினத்தால் சில நிமிடங்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது.
DNA இழப்பு என்பது இனப்பெருக்கத்தை சாத்தியமற்றதாகி, சந்ததியினரை உருவாக்கும் தன்மை முற்றிலுமாக சீர்குலைந்து வாழ்க்கை முறை பாதிக்கப்படும். DNA இல்லாதது மனிதர்களின் பன்முகத்தன்மையை முற்றிலுமாக அழித்துவிடும்.
நோய்களால் நாம் பாதிக்கப்படுவதை தீர்மானிப்பதில் DNA முக்கிய பங்கு வகிக்கிறது. இது நம் உடலில் இல்லாமல் போனால், நோய்களைக் கண்டறிந்து அதற்கான தடுப்பு சிகிச்சைகள் மேற்கொள்வது சவாலானதாக மாறிவிடும். இதனால், சுகாதார பாதுகாப்பில் பெரும் பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
DNA காணாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள்:
நீங்கள் நினைப்பது போல நமது உடலில் இருந்து DNA உடனடியாக காணாமல் போவது சாத்தியமற்றது. சில மரபணு நோய்கள் DNA-வை சேதப்படுத்தி அழிக்கலாம். அல்லது கதிர்வீச்சு, நச்சுப் பொருட்கள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் காரணமாக DNA சேதப்படுத்தப்படலாம். சில வகை குறிப்பிட்ட நோய்த்தொற்றுக்கள் DNA-வை பாதிக்கக் கூடியவை.
ஆனால், இவ்வாறு நடப்பது அரிதினும் அரிதானது. DNA இல்லாத உலகம் என்பது நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. உலகில் உயிரினங்கள் என்பதே இருக்காது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களும் ஒரே அடியாக அழிந்து போகும்.
எனவே DNA என்பது மனிதர்களின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.