Teleportation சாத்தியமானால் உலகம் எப்படி இருக்கும்? 

Teleportation
Teleportation
Published on

Time Travel என்ற வார்த்தையை பலர் கேட்டிருப்பீர்கள். ஆனால் இதைவிட, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பயணிக்க மனிதர்கள் பல நூறு ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல், விமான நிலையங்களில் காத்திருக்கும் நேரம், பயணத்தின் சோர்வு போன்ற அனைத்தும் நமது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்குகின்றன. 

கற்பனை செய்து பாருங்கள். திரைப்படங்களில் காட்டுவது போல ஒரு கணத்தில் எந்தத் தடைகளும் இல்லாமல் எந்த இடத்திற்கும் உங்களால் செல்ல முடியும் என்றால் என்ன நடக்கும்? Teleportation சாத்தியமானால் நமது வாழ்க்கை எவ்வாறு மாறும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Teleportation சாத்தியமானால் என்ன நடக்கும்? 

உலகத்தை சுற்றிப் பார்ப்பது மிகவும் எளிதாகும். வார இறுதியில் வெக்கேஷன் செல்ல கண நேரத்தில் உலகில் எந்த மூலைக்கும் நீங்கள் செல்லலாம். எவ்விதமான தடயமின்றி புதிய கலாச்சாரங்களை அனுபவிப்பதற்கும், புதிய இடங்களை ஆராய்வதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். 

நாம் விரும்பும் இடத்தில் பணியாற்றலாம். தொலைதூர வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்க நேரத்திற்கு வேலை பார்க்க வேண்டாம். வேலை முடிந்ததும் உடனடியாக வீட்டுக்கு வந்து விடலாம். 

மருத்துவ சிகிச்சை முறை எளிதாகும். நோயாளிகளுக்கு ஏதேனும் அவசரம் என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லலாம். ஏதேனும் ஆபத்து என்றால் நிபுணர்களின் ஆலோசனையை உடனடியாக பெற முடியும். 

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தூரம் காரணமாக எந்த ஆசையையும் தடுக்க வேண்டிய அவசியமில்லை. நண்பர்கள் குடும்பத்தினருடன் எளிதாக இணைந்து உறவை வளர்க்க முடியும். தூரம் இனி எந்த உறவுகளையும் பாதிக்காது. 

இதையும் படியுங்கள்:
சாதாரண மனிதர்கள் மருத்துவச் செலவுகளை நிர்வாகிப்பதற்கான ஆலோசனைகள்! 
Teleportation

மனிதர்கள் பயணிக்க போக்குவரத்து வாகனங்களின் தேவை இருக்காது. இதனால் சுற்றுச்சூழலில் கார்பன் வெளியேற்றம் கணிசமாகக் குறையும். 

பல நன்மைகள் இருக்கும் அதே வேளையில், மனிதர்களின் கெட்ட முகங்களும் வெளிவரும் வாய்ப்புள்ளது. தவறு செய்துவிட்டு தப்பிப்பது எளிதாகும். உலகில் எந்த இடத்திற்கும் மனிதர்கள் செல்ல முடியும் என்பதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும். 

Teleportation ஒரு அற்புதமான தொழில்நுட்பமாகும். இது நமது வாழ்க்கையை பல வழிகளில் மாற்றும் திறன் கொண்டது. இது உலகத்தை சிறியதாக உணர வைக்கும். மேலும், பல புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். அதே நேரம் இதனால் பல சவால்களும் எழக்கூடும் என்பதால், இதன் நன்மை தீமை இரண்டையுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com