சுனாமி எப்போது வரும் தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

when can a tsunami occur
when can a tsunami occur
Published on

சுனாமி பேரலைகள் பூமியில் ஏற்படும் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகும். இது கரையோரங்களில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய பிரம்மாண்ட அலைகள் பல்வேறு புவியியல் நிகழ்வுகளால் தூண்டப்படுகின்றன. இப்பதிவில் சுனாமி பேரலைகள் எதுபோன்ற காரணிகளால் ஏற்படலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

சுனாமி என்றால் என்ன? 

சுனாமி என்பது பெரும்பாலும் நில அதிர்வுகளால் ஏற்படும் மிகப்பெரிய கடல் அலைகளாகும். இவை பெரும்பாலும் கடலுக்கு அடியில் ஏற்படும் சக்தி வாய்ந்த நில அதிர்வுகளால் ஏற்படுகின்றன என்றாலும், எரிமலை வெடிப்புகள், நீருக்கு அடியில் நிலச்சரிவு அல்லது பெரிய விண்கற்கள் கடலில் தாக்குவதால்கூட ஏற்படலாம். இந்த நிகழ்வு நடக்கும்போது மிகப்பெரிய அளவிலான கடல் நீர் இடமாற்றம் அடைந்து சுனாமி அலைகளாக மாறுகிறது. 

பூகம்பங்கள்: சுனாமி ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக இருப்பவை பூகம்பங்கள். கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்படும்போது, கடல் நீர் குறிப்பிட்ட அளவு இடப்பெயர்ச்சி அடைகிறது. இது பெரும்பாலும் உள்பகுதியில் இருந்து தண்ணீரை வெளிப்பகுதிக்கு தள்ளுவதால் சக்தி வாய்ந்த பேரலைகள் வரிசையாக உருவாகின்றன. நிலநடுக்கத்தின் அளவைப் பொறுத்து சுனாமியின் அளவு மற்றும் தீவிரத்தன்மை தீர்மானிக்கப்படும். 

நிலச்சரிவு மற்றும் எரிமலை வெடிப்புகள்: கடலில் ஏற்படும் நிலச்சரிவு மற்றும் எரிமலை வெடிப்புகள் காரணமாகவும் சுனாமி தூண்டப்படலாம். நீருக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் கடற்பரப்பை நோக்கி தண்ணீர் வேகமாக தள்ளப்படும். இதனால் சுனாமிப் பேரலைகள் உருவாக்கலாம்.  இதே போல் கடலுக்கு அருகில் அல்லது கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டாலும் சுனாமி அலைகள் உருவாக்கலாம். ஆனால் இத்தகைய நிகழ்வுகள் நிலநடுக்கத்தால் ஏற்படும் சுனாமியை விட குறைவாகவே உள்ளன. 

பிற காரணிகள்: நில அதிர்வு சுனாமி ஏற்படுவதற்கு முதன்மை காரணமாக இருந்தாலும், சில நேரங்களில் மேலும் பிற காரணிகளாலும் சுனாமி ஏற்படலாம். அதாவது கடற்கரையின் வடிவம் மற்றும் சில பண்புகளால் கூட சுனாமி அலைகள் ஏற்படும். குறுகிய விரிகுடாக்கள், அல்லது சிறிய நுழைவு வாயில் உள்ள பகுதிகளில் சுனாமி அலை திடீரென ஏற்படலாம். மேலும் கடலின் ஆழம்கூட சுனாமி அலைகள் ஏற்படாக் காரணமாக அமையும். ஆழம் குறைந்த இடத்தில் திடீரென நீர்மட்டம் உயர்வதாலும் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது. 

இதையும் படியுங்கள்:
World Heritage Day: பாரம்பரியத்தைக் காப்பது நம் கடமை! 
when can a tsunami occur

இதுவரை நாம் கண்டு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்திய சுனாமி 2006 ஆம் ஆண்டு ஏற்பட்டதாகும். இதில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. எனவே சுனாமியின் அழிக்கும் தன்மையைக் கருத்தில் கொண்டு, கடலோரத்தில் அவற்றின் தாக்கத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இயற்கை எப்போது எப்படி மாறும் என்பதை கணிக்கவே முடியாது என்பதால், நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com