இருவரது கைரேகைகள் ஒன்றாக இருப்பதில்லை என்பதை கண்டுபிடித்தவர் யார்?

Fingerprints
Fingerprints
Published on

நமது கை வழுவழுவென்று இருந்தால், எதையும் பிடிக்க முடியாது, வழுக்கிவிடும். நாம் இறுக்கமாகப் பிடிக்க உதவுபவை ரேகைகள். கைகளுக்கு உராய்வைத் தரும் வரிமடிப்புகள்தான் இந்த ரேகைகள்.

கண்ணாடி, உலோகம் மற்றும் பளபளப்பு ஏற்றப்பட்ட எல்லாப் பொருட்களிலும் ரேகைகள் பதியும். மேல் தோல் மடிப்பில் உள்ள சுரப்பிகளிலிருந்து வியர்வை சுரக்கும். சுரப்பியிலிருந்து வியர்வை வெளியாகிக் கொண்டே இருப்பதனாலேயே, ரேகைகள் இப்படிப் பதிந்துவிடுகின்றன. குற்றம் நடந்த இடத்தில் இப்படிக் கிடைக்கும் ரேகைகளே தடயம் அறியவும் புலனாய்வுக்கும் பயன்படுகின்றன.

ஒரே மாதிரியான கைரேகை இருவருக்கு இருக்கும் வாய்ப்பு 64 பில்லியனில் ஒருவருக்கு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Sir Francis Galton
Sir Francis Galton

தற்போது குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கும் ஒரு துறையான கைரேகைப் பிரிவில் விரல்களின் ரேகைகள் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறைகளை அமைத்துக் கொடுத்தவர் பரிணாம வளர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் சர் சார்லஸ் டார்வின் அவர்களின் மைத்துனர் சர் பிரான்சிஸ் கால்டன்.

பிரான்சிஸ் கால்டன் என்ற இங்கிலாந்து நாட்டுக்காரர், ஒரு பத்திரிகையை புரட்டிக் கொண்டிருந்தார். கைரேகை பற்றிய ஒரு கட்டுரை அவரது கவனத்தைக் கவர்ந்தது. பிறகு பத்தாண்டுகள் தொடர்ந்து கைரேகை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு புத்தகத்தை எழுதினார். இருவரது கைரேகைகள் ஒன்றாக இருப்பதில்லை என்ற உண்மையை கண்டுபிடித்தவர் அவர் தான். அவரது ஆராய்ச்சியின் பயனாக இன்று உலகெங்கும் பல குற்றவாளிகள் கைரேகை மூலம் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.

ஒருவரை இன்னொருவரிடமிருந்து பிரித்து அறிய ரேகை பதிவை விஞ்ஞான ரீதியாக பயன்படுத்தும் முறையை 1636 ம் ஆண்டு இத்தாலிய உடற்கூறு பேராசிரியர் மார்செல் மார்டிகி என்பவர் கண்டறிந்தார்.

1958 ம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் கைதிகளை அடையாளம் கண்டு கொள்ள கைரேகை பதிவு முறை கையாளப்பட்டது.

விரல் ரேகையை பயன்படுத்தி ஒரு நபர் ஆணா, பெண்ணா என்று கண்டறியலாம் என்பது 2015 ம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வில் இது கண்டறியப்பட்டது.

ஆணை விட பெண்ணுக்கு வியர்வை அதிகம். விரல் நுனியில் சுரக்கும் அமினோ அமிலத்தின் அளவை கொண்டு அது ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டுபிடிக்க முடியுமாம்.

கைரேகையை மையமாக வைத்து தோன்றியது தான் தடயவியல் துறை. ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கொல்கத்தா, ஆக்ரா போன்ற இடங்களில் தொடங்கியது. தற்போது சென்னை உட்பட ஒன்பது மண்டல அலுவல்கள் உள்ளன. மேலும் 33 இயங்கும் தடய அறிவியல் (Mobile Forensic Science Laboratory) அலுவலகங்கள் உள்ளன. சென்னை அலுவலகத்தில் மட்டும் அனைத்து சோதனைகளையும் செய்யும் வசதி உள்ளது.

இதையும் படியுங்கள்:
செல்பி புகைப்படங்கள் வாயிலாக உங்களது கைரேகை திருடப்படலாம்… ஜாக்கிரதை! 
Fingerprints

தற்போது மத்திய தடயவியல் துறை ஆய்வகம், மாநில அளவிலான தடயவியல் ஆய்வகம், நடமாடும் தடயவியல் ஆய்வகம் என்ற மூன்று பிரிவுகளாக தடயவியல் துறை இயங்குகிறது. குஜராத்தில் தடயவியல் துறை படிப்பிற்காக பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது.

உலகப்புகழ் பெற்ற கைரேகை நிபுணர் ஐரிஸ் நாட்டைச் சேர்ந்த சீரோ. இவரை ரேகை சாஸ்திர மன்னர் என்றே அழைத்தார்கள். காரணம் தனது கணிப்பை துல்லியமாக அது நன்மையோ தீமையோ அப்பட்டமாக சொல்லி விடுவார். இவருடைய கணிப்பு என்றுமே தவறியது கிடையாது.

'வார் ஹீரோ' என்று புகழப்பட்ட ஃபீல்டு மார்ஷல் லார்டு கிச்செனிரின் கையைப் பார்த்த சீரோ வழக்கமான தகவல்களைக் கூறிவிட்டு "நீங்கள் நீரில் மூழ்கி மரணமடைவீர்கள்" என்றார் .

நீச்சல் தெரியாத கிச்செனர் உடனே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நீச்சல் கற்றுக் கொண்டார். 1916 -ம் ஆண்டு ஹம்ப்ஷயர் என்ற கப்பலில் பயணம் மேற்கொண்டார் மார்ஷல் கிச்செனர். அந்த கப்பல் கடற்கன்னி ஒன்றில் மனதில் சேதமுற்றது மூழ்கியது. வார்டு கிச்செனர் நீரில் மூழ்கி சீரோ வாக்குப்படி மரணமடைந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com