பெரும்பாலான விமானங்கள் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன?

airplane
airplaneImg credit: freepik
Published on

ஒரு தெளிவான வானத்தைப் பார்க்கும் போது, மேகங்களுக்கு மேல் செல்லும் விமானங்களை அடிக்கடி பார்ந்த்திருப்போம். இந்த விமானங்கள், மக்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லவும், உலகெங்கிலும் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லவும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சக்தி வாய்ந்த போக்குவரத்து வாகனமாக செயல்படுகின்றன.

இந்த விமானங்களின் ஒவ்வொரு பாகமும், பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் அறிவியல் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் வெளித்தோற்றம் கூட பல ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகே தேர்வு செய்யப்படுகின்றன. நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அவற்றின் வெளித்தோற்றத்தில் ஒரே மாதிரியான நிற அமைப்பு இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

குறிப்பாக, இந்த விமானங்களின் வெளிப்பக்கம் பளபளப்பான, வெள்ளை நிறத்தில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அது ஏன் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றது என எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இந்த சீரான, பிரகாசமான மற்றும் பளபளப்பான வெள்ளை நிறம், விமானங்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது.

அதோடு, இது வெறும் அழகுக்காக மட்டுமல்ல, இதற்குப் பின்னால் பல முக்கியமான மற்றும் ஆச்சரியமான காரணங்கள் உள்ளன.

1. வெப்பத்தைக் குறைக்கிறது:

வெள்ளை நிறம் சூரிய ஒளியை உறிஞ்சாமல், அதை மீண்டும் பிரதிபலிக்கிறது. இதனால் விமானத்தின் உட்பகுதி குளிர்ச்சியாக இருக்கும். இது குளிர்ச்சிக்கான செலவைக் குறைப்பதுடன், விமானத்திற்குள் உள்ள உணர்திறன் வாய்ந்த உபகரணங்களையும் பாதுகாக்கிறது.

2. விரிசல்கள் மற்றும் சேதங்களைக் கண்டறிவது எளிது:

பளபளப்பான வெள்ளை மேற்பரப்பில், ஏதேனும் விரிசல்கள், கீறல்கள் அல்லது சேதங்கள் ஏற்பட்டால், அவை எளிதில் தெரியும்.இதனால் பாதுகாப்புச் சோதனைகள் எளிதாகவும், திறமையாகவும் இருக்கும். ஆரம்பத்திலேயே சேதத்தைக் கண்டறிவதால், பழுது செலவுகள் குறைகின்றன.

3. சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது:

வண்ணப் பூச்சுகள் சூரிய ஒளியால் விரைவாக மங்கிவிடும். ஆனால் வெள்ளை நிறம் மங்குவதை எதிர்க்கும். இதனால் விமானம் நீண்ட காலத்திற்குப் புதியது போல் சுத்தமாகவும் இருக்கும். இதன் காரணமாக மீண்டும் வண்ணம் பூசுவதற்கான அவசியம் குறைவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வஞ்சம் வைத்து பழி தீர்க்கும் காக்கைகள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
airplane

4. எடை மற்றும் எரிபொருள் சேமிப்பு:

கூடுதல் பெயிண்ட் எடை, எரிபொருள் நுகர்வை அதிகரிக்கும். மற்ற டார்க் நிறங்களுடன் ஒப்பிடும் போது, வெள்ளை நிறத்திற்கு குறைவான பூச்சுகளே தேவைப்படும். எடை குறைவாக இருப்பதால், செயல் திறன் அதிகரித்து, இயக்க செலவுகள் குறைகிறது.

5. மறுவிற்பனை மதிப்பு:

ஒரு விமான நிறுவனத்தால் பல வருடங்கள் பயன்படுத்தப்பட்ட விமானம், பெரும்பாலும் பிற நிறுவனங்களுக்கு விற்கப்படும். அனைத்து வாங்குபவர்களையும் கவரும் ஒரு சுத்தமான, நடுநிலையான நிறமாக வெள்ளை உள்ளது. இதன் மூலம் புதிய உரிமையாளருக்கு மீண்டும் பெயிண்ட் அடிக்கும் செலவு குறைகிறது.

6. பறவைகளைத் தடுக்க உதவுகிறது:

வெள்ளை நிற மேற்பரப்புகள் விமானிகளுக்கு வானத்தில் பறவைகளைப் பார்க்க உதவுகிறது. இதனால் பறவை தாக்குதல்களின் ஆபத்து குறைகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் போன் மெதுவாக செயல்பட்டு எரிச்சலை உண்டாக்குகிறதா? போனின் செயல் திறனை மேம்படுத்த 3 எளிய வழிகள்!
airplane

விமானத்தின் நிறத் தேர்வு என்பது அறிவியல், பாதுகாப்பு மற்றும் நிதி சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது. அடுத்த முறை நீங்கள் வானத்தைப் பார்க்கும் போது, இவை ஏன் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கின்றன என்பதை நிச்சயம் புரிந்து கொள்வீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com