ஏன் சில நாடுகள் இடதுபுறமும், சில நாடுகள் வலதுபுறமும் கார் ஓட்டுகின்றன? பின்னணியில் உள்ள ரகசியம்!

Car driving side history - சாலை விதிகள்
Car driving side history - சாலை விதிகள்AI Image
Updated on

னிதர்கள் கால்நடையாகச் செல்ல உருவாக்கிய கரடுமுரடான தடங்களே உலகின் முதல் சாலைகள். கி.மு 2600 - 2200 காலக்கட்டத்தில் பழங்கால எகிப்து நாட்டில் முதல் கற்கள் பதிக்கப்பட்ட சாலை மனிதனால் உருவாக்கப்பட்டது. அதுவே உலகின் முதல் கல் சாலையாக அறியப்படுகிறது. ரோம பேரரசு தனது ராணுவ மற்றும் வணிகத் தேவைகளுக்காக கற்கள் மற்றும் கான்கிரீட்டால் மிக நீண்ட சாலைகளை உருவாக்கியது.

1820களில் ஸ்காட்லாந்து பொறியாளர் ஜான் லௌடன் மெக்கடம் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நீடித்து உழைக்கும் சாலைதான் உலகின் முதல் பொது மக்கள் சாலையாகும். இது, நீரை வெளியேற்றும் வகையில், கவனமாக இறுக்கப்பட்ட, சீரான அளவுள்ள நொறுக்கப்பட்ட கற்களின் அடுக்குகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

அந்நாளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் சாலைகளை அமைத்தனர்.தனியார் நிறுவிய சாலைகளை விட அரசாங்கம் நிறுவிய சாலைகள் சற்று உயரமாக இருந்ததால் அதனை "ஹைவேஸ்" என்றனர். அப்படி வந்ததுதான் நெடுஞ்சாலைகளுக்கு "ஹைவேஸ்"என்ற பெயர்.

உலகிலேயே மிகப்பெரிய சாலை நெட்வொர்க் கொண்ட நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அந்நாட்டில் 4 மில்லியன் மைல்களுக்கும் அதிகமான சாலைகள் உள்ளன, பெரும்பாலும் அந்நாட்டின் கிராமப்புறங்களில் இருவழிச் சாலைகள் உள்ளன. உலகிலேயே இரண்டாவது பெரிய சாலை நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் 66.7 லட்சம் கிலோமீட்டர் சாலை நெட்வொர்க் உள்ளது.

இதில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆகும். 1,79,535 கிமீ தூரத்திற்கான சாலை மாநில நெடுஞ்சாலைகள் ஆகவும், 63,45,403 கிமீ தூரத்திற்கான சாலைகள் பிற சாலைகளாகவும் உள்ளன. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை கன்னியா குமரியிலிருந்து வாரணாசி வரை உள்ள சாலை தான். இதன் நீளம் 2365 கிமீ.மிகக்குறைவான நீளமுள்ள சாலை வில்லிங்டன் தீவையும், கொச்சி பைபாஸ் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலை இதன் நீளம் 6 கிமீ தான்.

Car driving side history - சாலை விதிகள்
Car driving side history - சாலை விதிகள்AI Image

நம்பர் பிளேட் முறை முதலில் எதற்காக தொடங்கியது?

வாகனங்களுக்கு சட்டபூர்வமாக (சாலை விதிகள்) நம்பர் பிளேட்டுகளை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு பிரான்ஸ். ஆகஸ்ட் 14, 1893 அன்று, பாரிஸ் போலீஸ் ஆணை ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பாரிஸ் வீதிகளில் புழக்கத்தில் இருந்த மோட்டார் வாகனங்கள் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியதால், அந்த வாகனங்களின் உரிமையாளர்களைப் பிடிப்பதற்காக நம்பர் பிளேட்டுகளை கட்டாயமாக்கி இந்த ஆணை அறிமுகப்படுத்தப்பட்டது.

"பாரிஸ் நகரில் புழங்கும் ஒவ்வொரு மோட்டார் வாகனமும் ஒரு அடையாள பிளேட்டை கொண்டிருக்க வேண்டும். அந்த பிளேட்டில் வாகன எண், அத்துடன் உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி இருக்க வேண்டும்" என்று அந்த ஆணை கூறியது. பாரிஸ் நகர எல்லைக்குள் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டதைக் கண்ட ஜெர்மனி 1896இல் தமது நாட்டிலும் நம்பர் பிளேட் பயன்பாட்டை அறிமுகம் செய்தது.

இதையும் படியுங்கள்:
உங்கள் உழைப்பில் 80% வீணாகிறதா? வெற்றியாளர்களின் ரகசியமான "80/20 விதி" இதோ!
Car driving side history - சாலை விதிகள்

நெதர்லாந்து இந்த விஷயத்தில் ஒரு படி முன்னேறியது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நம்பர் பிளேட் சட்டத்தைக் கொண்டு வந்த பெருமை நெதர்லாந்தையே சேரும்.டச்சு அரசாங்கம் 1898இல் ஒரு தேசிய போக்குவரத்துச் சட்டத்தை இயற்றியது. இதன் கீழ், 'ஓட்டுநர் அனுமதிப் பத்திரத் தகடுகள்' என்ற பெயரில் நம்பர் பிளேட்டுகள் வழங்கப்பட்டன.

சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? உலகம் ஏன் இப்படி இருவேறு முறைகளாகப் பிரிந்தது?காலனி ஆதிக்க விரிவாக்கமே சாலை விதிகளைக் உலகம் முழுவதும் பரப்பியது.

பிரிட்டன் தனது பரந்த பேரரசு முழுவதும் இடதுபுற ஓட்டுதலை அமல்படுத்தியது, அதனால்தான் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இன்றும் அதைப் பின்பற்றுகின்றன. மறுபுறம், நெப்போலியன் ஐரோப்பியக் கண்டம் முழுவதும் வலதுபுறம் ஓட்டுவதற்கு உத்தரவிட்டார், மேலும் அவரது செல்வாக்கு பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் நிலைத்திருந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு, பெரும்பாலான நாடுகள் தங்கள் அமைப்பை மாற்றவில்லை, அவர்கள் தாங்கள் மரபுரிமையாகப் பெற்றதை அப்படியே தக்க வைத்துக் கொண்டனர்.20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கார்களின் வருகை இந்த மாற்றத்தை நிரந்தரமாக்கியது. பிரிட்டனில், உற்பத்தியாளர்கள் வலதுபுற ஸ்டீயரிங் சக்கரங்களைக் கொண்ட கார்களை உருவாக்கினர், இது இடதுபுறப் போக்குவரத்தை வலுப்படுத்தியது.

அதே சமயம் அமெரிக்காவில், ஹென்றி ஃபோர்டின் புரட்சிகரமான Model T இடதுபுற ஸ்டீயரிங்குடன் வந்தது, இது வலதுபுறம் ஓட்டுவதை தேர்வாக மாற்றியது. Model T வரலாற்றில் அதிக அளவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் ஒன்றாக இருந்ததால், அமெரிக்க கார்களை இறக்குமதி செய்த நாடுகளும் வலதுபுற ஓட்டுதலை ஏற்றுக்கொண்டன. கார் உற்பத்தியாளர்கள் வெறும் கார்களை மட்டும் தயாரிக்கவில்லை, அவர்களுடைய சாலை விதிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

இதையும் படியுங்கள்:
உயிரைக் காக்கும் ஒரு மினியேச்சர் கருவி: மலையேற்றக் கடிகாரங்களின் ரகசியம்!
Car driving side history - சாலை விதிகள்

உலகெங்கும் நாம் தினமும் பயன்படுத்தும் சாலைகளின் வடிவமைப்பு மற்றும் வாகன ஓட்டப்பயிற்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் உலகளாவிய அரசியலையும், வரலாற்றுத் திருப்புமுனைகளையும் நீங்கள் துல்லியமாகப் புரிந்துகொள்வீர்கள். இனி சர்வதேசப் பயணங்களின் போது ஒவ்வொரு நாட்டின் போக்குவரத்து முறையையும் வெறும் விதியாகப் பார்க்காமல், அதன் பின்னுள்ள வரலாற்றுப் பாரம்பரியத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் புதிய பார்வையைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com