Dark Matter & Dark Energy பற்றி நமக்கு ஏன் ஒன்றுமே தெரியவில்லை? 

Dark Matter & Dark Energy
Dark Matter & Dark Energy
Published on

இந்தப் பிரபஞ்சத்தை அவ்வளவு எளிதில் யாராலும் விளக்கி விட முடியாது.‌ நாம் பார்க்கக்கூடிய தொடக்கூடிய அனைத்தும் பிரபஞ்சத்தின் மிகச்சிறந்த பகுதியே. பிரபஞ்சத்தின் பெரும்பகுதி இருளில் மூடப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த இருளில் மூடப்பட்டிருக்கும் பொருள் மற்றும் ஆற்றலைதான் நாம் Dark Matter மற்றும் Dark Energy என்று அழைக்கிறோம். இவற்றைப் பற்றிய கருத்து விஞ்ஞானிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

ஏனென்றால், நாம் பார்க்கக்கூடிய பொருட்களின் ஈர்ப்பு விசையை வைத்து மட்டுமே பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்க முடியாது. பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே செல்வதற்கும், விண்மீன்கள் ஒன்றையொன்று ஈர்த்துக் கொள்வதற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே டார்க் மேட்டர் மற்றும் டார்க் எனர்ஜி என்ற கருத்து உருவாகியது. 

Dark Matter: டார்க் மேட்டர் என்பது நாம் பார்க்கவோ, தொடவோ முடியாத ஒரு வகை பொருள். இது ஒளியை உறிஞ்சாது, வெளியிடாது. எனவே, இதை நாம் நேரடியாகக் காண முடியாது. ஆனால், அதன் ஈர்ப்புவிசை மூலம் அதன் இருப்பை நாம் அறிய முடியும். விண்மீன்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுற்றுவதற்கு அவற்றை ஈர்க்கும் போதுமான அளவு ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டும். ஆனால், நாம் அறிந்த பொருளின் அளவு விண்மீன்களை அதிக வேகத்தில் சுற்ற வைக்க போதுமானதாக இல்லை. அந்தப் பொருள் என்னவென்றே தெரியாததால் அதற்கு டார்க் மேட்டர் எனப் பெயர் வைத்தனர். 

Dark Energy: டார்க் எனர்ஜி என்பது இந்தந் பிரபஞ்சத்தை விரிவடையச் செய்யும் ஒரு மர்மமான ஆற்றல். பொதுவாக ஈர்ப்புவிசை காரணமாக பிரபஞ்சம் சுருங்கிக்கொண்டேதான் செல்ல வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பிரபஞ்சம் விரிவடைந்து செல்வதால், அந்த செயல்பாட்டிற்கு உதவும் ஆற்றலை டார்க் எனர்ஜி எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆற்றல் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பதாக நம்பப்படுகிறது. இதுதான் பிரபஞ்சத்தை தொடர்ந்து விரிவடையச் செய்கிறது. 

நமக்கு ஏன் இவற்றைப் பற்றி தெரியவில்லை? 

நமக்கு ஏன் டார்க் மேட்டர் மற்றும் டார்க் எனர்ஜி பற்றி தெரியவில்லை என்றால், அவை என்னவென்று இதுவரை நம்மால் நேரடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. நம்மால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று இருக்கிறது என்பதை மட்டுமே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, இவை இரண்டையும் நேரடியாக நம்மால் பார்க்க முடியாது. இவை ஒளியை உறிஞ்சவோ, வெளியிடவோ செய்யாததால் நம்மால் பார்க்க முடியவில்லை. 

இதையும் படியுங்கள்:
வீட்டுப் பெரியவர்களிடம் நாம் கற்க வேண்டிய  வாழ்க்கைப் பாடங்கள்!
Dark Matter & Dark Energy

மேலும், இவை நாம் காணும் எந்த பொருள்களுடனும் தொடர்பு கொள்வதில்லை. எனவே, அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம். டார்க் மேட்டர் மற்றும் டார்க் எனர்ஜி போன்றவற்றை விளக்குவதற்கு முற்றிலும் புதிய இயற்பியல் கோட்பாடுகள் தேவைப்படுகின்றன. நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கும் இயற்பியல் கோட்பாடுகள் இவற்றை விளக்கப் போதுமானதாக இல்லை என்பதே உண்மை. 

எனவே, இவற்றைப் பற்றி மேலும் அறிய நாம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கோட்பாடுகளை உருவாக்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com