எல்பிஜி சிலிண்டர்கள் ஏன் உருளை வடிவில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன?

சதுரம் அல்லது செவ்வக வடிவ சிலிண்டர்களில் மூலைகளில் அழுத்தம் குவிந்து வெல்டிங் பகுதிகள் பலவீனமாவதால் வெடிப்பு அபாயம் உயரும்; உருளை வடிவம் போக்குவரத்தையும் மனித உழைப்பையும் எளிதாக்குகிறது.
lpg-cylinders
lpg-cylinders
Updated on

பெட்ரோலியம் சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் லிக்யூஃபைட் பெட்ரோலியம் கேஸ் (LPG) என்ற திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு சிலிண்டருக்குள் அதிக அழுத்தத்தில் அடைக்கப்பட்டு திரவ நிலையில் இருக்கும். ஒரு மூடிய கொள்கலனில் அதிக அழுத்தம் கொடுக்கும்போது அந்த அழுத்தம் அதன் உட்புற சுவர்களில் சமமாக பரவவேண்டும் என்பது இயற்பியல் விதி.

அந்த வகையில் எரிவாயுவை மூலைகள் இல்லாத உருளை வடிவ சிலிண்டர்களில் அடைக்கப்படும்போது அழுத்தம் எல்லா பக்கங்களிலும் சீராகப் பரவுகிறது.

எல்பிஜி சிலிண்டர்கள் ஒருவேளை உருளை வடிவத்தில் இல்லாமல் சதுரமாகவோ, செவ்வக வடிவங்களில் இருந்தால் அதனுடைய நான்கு மூலைகளிலும்  அதிகப்படியாக அழுத்தம் குவிவதோடு மூலைப் பகுதிகள் அழுத்தத்தை தாங்க முடியாமல் பலவீனமடைந்து சிலிண்டர் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.

எல்பிஜி சிலிண்டர் உற்பத்தியின் போதும் அதனை பராமரிக்கின்ற போதும் உருளை வடிவமே அதிக பாதுகாப்பை வழங்குகிறது. ஒருவேளை சதுர வடிவ சிலிண்டர்களை தயாரித்தால் அதனுடைய விளிம்புகளை இணைக்க அதிக அளவில் வெல்டிங் செய்யவேண்டிய தேவை இருக்கும்.

பொதுவாக வெல்டிங் செய்யப்பட்ட இடங்கள் வெல்டிங் செய்யாத இடங்களைவிட பலவீனமானவை என்பதால் அதிக அழுத்தத்தின் காரணமாக வெல்டிங் செய்யப்பட்ட இடங்களில் வெடிப்பு ஏற்பட அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. உருளை வடிவ சிலிண்டர்களில் வெல்டிங் வைக்க வாய்ப்பு இல்லாததால் இத்தகைய நடைமுறை சிக்கல்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. மேலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சிலிண்டர்களை கொண்டு செல்லும்போது உருளை வடிவத்தில் இருப்பதால் எளிதாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிறகு முளைத்த எறும்புகள் படையெடுக்கிறதா... எந்த ஒரு செலவும் இல்லாமல் ஈஸியாக விரட்டும் ட்ரிக்ஸ்!
lpg-cylinders

உருளை வடிவமாக இருப்பதால் தரையில் உருட்டி செல்வதன் மூலம் எளிதாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதோடு மனித உழைப்பை குறைக்க முடிகிறது. கூர்மையான மூலைகள் இல்லாத உருளை வடிவ சிலிண்டர்களை எடுத்துச்செல்லும் பொழுது காயம் ஏற்படும் அபாயமும் தேய்மானமும் குறைவாக இருக்கிறது அதுவே சதுர வடிவம் ஆகவோ செவ்வக வடிவமாக இருந்தால் கண்டிப்பாக தூக்கித்தான் செல்லவேண்டும்.

மேலும் இதனை எடுத்துச் செல்லும்பொழுது கூர்மையான மூலைகள் காரணமாக காயம் ஏற்படவும் தேய்மானமும் அதிகரிக்கும் என்பதால் சிலிண்டர்கள் உருளை வடிவத்தில் இருக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com