Parachutes
Parachutes

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

Published on

விமானம் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமானால், அது நிச்சயமாக, ஆபத்துக் காலங்களில் ஏன் பயணிகளுக்கு பாராசூட் கொடுத்து தப்பிக்க வைப்பதில்லை? என்பதாகத்தான் இருக்கும். இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாகக் காணலாம். 

விமானம் என்பது பல காரணிகளை சமநிலையில் வைத்து செயல்படும் ஒரு சிக்கலான இயந்திரம். விமானம் பறக்க உந்துவிசை, உயர்த்து விசை, எதிர் விசை மற்றும் எடை ஆகிய நான்கு முக்கிய விசைகள் செயல்படுகின்றன. இந்த விசைகளின் சமநிலைதான் விமானத்தை வானில் நிலை நிறுத்துகிறது. விமானம் பறக்கும் உயரம், வேகம் மற்றும் திசை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விமானியும் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. 

பாராசூட் என்பது ஒரு வகையான காற்று எதிர்ப்பு கருவி. இது ஒரு நபரை உயரத்தில் இருந்து பாதுகாப்பாக கீழே இறக்க பயன்படுகிறது. பாராசூட் ஒரு பெரிய துணியால் ஆனது. இது காற்றில் விரிந்து நபரின் எடையைக் குறைத்து மெதுவாக கீழே இறங்க உதவுகிறது. 

விமானத்தில் பாராசூட் பயன்படுத்த முடியாததற்கான காரணங்கள்: 

  • பாராச்சூட்டுகள் பெரியதாகவும் எடையுள்ளதாகவும் இருக்கும். ஒவ்வொரு பயணிக்கும் ஒரு பாராசூட் வழங்கினால் விமானத்தின் மொத்த எடை அதிகரிக்கும். இதனால், விமானத்தின் எரிபொருள் நுகர்வு அதிகரித்து விமானத்தின் பறக்கும் திறன் பாதிக்கப்படும். மேலும், ஒவ்வொரு பயணிக்கும் பாராசூட்டை சேமித்து வைக்க போதுமான இடம் விமானத்தில் இருக்காது. 

  • அவசர காலத்தில் பயணிகள் தங்களுடைய பாராசூட்டை எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. விமானத்தில் உள்ள அழுத்தம், குறைந்த வெப்பநிலை போன்ற காரணங்களால் பாராசூட்டை பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். 

  • விமானம் விழும்போது அதன் வேகம் மிக அதிகமாக இந்த வேகத்தில் இதிலிருந்து ஒரு பயணி தனது பாராசூட்டை திறந்து பாதுகாப்பாக கீழே இறங்க முடியாது. விமானம் பொதுவாக பூமியில் இருந்து மிக உயரத்தில் பறக்கும். அந்த உயரத்தில் பாராச்சூட் திறந்தாலும் பயணி பாதுகாப்பாக தரையில் இறங்குவார் என சொல்ல முடியாது. 

  • விமானத்தில் உள்ள மொத்த பயணிகளும் பாரச்சூட்டை எப்படி பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். சில பயணிகள் தவறுதலாக பாராசூட்டைத் திறந்து விடலாம் அல்லது பாராசூட்டை சரியாக பயன்படுத்தத் தெரியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். இது மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும். 

  • ஒவ்வொரு விமானத்திலும் உள்ள அனைத்து பயணிகளுக்கும் பாராட்டு வழங்குவது மிகவும் செலவு அதிகரிக்கும் வேலை. இதனால் விமான பயணத்தின் செலவும் அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
6 லட்சம் பேர் பணிபுரியும் உலகின் மிகப்பெரிய விமான நிலையம்!
Parachutes

விமானப் பயணத்தை பாதுகாப்பானதாக வைத்திருக்க விமான நிறுவனங்கள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. விமானங்கள் தவறான வானிலை, இயந்திரக் கோளாறுகள் போன்றவற்றை எதிர்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. விமானிகள் அவசரகாலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சிகளைப் பெறுகின்றனர். மேலும், விமானங்களில் பல வகையான பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், அவ்வளவு எளிதில் அது பழுதடைந்துவிடாது. 

logo
Kalki Online
kalkionline.com