Wi-Fi தெரியும், அது என்னது Li-Fi? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

ஒளியில் அனுப்பப்படும் தரவுகள் - Li-Fi தொழில்நுட்பத்தின் அதிவேக மற்றும் பாதுகாப்பான பயன்பாடுகள்!
Li-Fi technology
Li-Fi technology

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வேகமான மற்றும் நம்பகமான வயர்லெஸ் தகவல் தொடர்பின் தேவை எப்போதும் அதிகரித்து வருகிறது. ஒளியின் ஆற்றலைப் பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தரவை அனுப்பும் புதுமையான தொழில்நுட்பமே Li-Fi. அதாவது Light Fidelity என்பதன் சுருக்கமே Li-Fi. இந்த முறையில், தரவு பரிமாற்றம் வேகமாக இருப்பது மட்டுமின்றி, பாதுகாப்பானதாகவும் இருக்கும்.  

Li-Fi எவ்வாறு செயல்படுகிறது? 

இந்தத் தொழில்நுட்பம் தரவுகளை அதிவேகத்தில் அனுப்ப LED-ஐ பயன்படுத்துகிறது. இந்த LED-கள் மனிதக் கண்களுக்குப் புலப்படாத வகையில் ஒளிர்ந்து தரவுகளைப் பரிமாறுகிறது. இந்த ஒளி சிக்னல்களை ரிசீவர்கள் கைப்பற்றி, அவற்றை மீண்டும் பயன்படுத்தக்கூடிய தரவுகளாக மாற்றுகின்றன. அதாவது இந்த முறையில் ஒளி மூலமாக தரவுகள் பரிமாறப்படுகிறது. இதன் மூலமாக பாரம்பரிய ரேடியோ அலைவரிசை அடிப்படையிலான Wi-Fi-க்கு மாற்றாக இது பார்க்கப்படுகிறது. 

வேகம்: இந்த தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க நன்மைகளில், அதன் தரவுப் பரிமாற்ற வேகம் அடங்கியுள்ளது. Li-Fi மூலமாக வினாடிக்கு பல ஜிகாபைட் வேகத்தில் தரவுகளை அனுப்பலாம். இது வைஃபை திறனை விட அதிக திறன் கொண்டதாகும். இதன் மூலமாக தடையற்ற வீடியோ ஸ்ட்ரீமிங், பெரிய அளவு கோப்பு பரிமாற்றம் மற்றும் நிகழ் நேர பயன்பாடுகள் போன்றவற்றிற்கு உதவியாக இருக்கும். எனவே எதிர்காலத்தில் மெதுவான இணையவேகம் என்ற ஒன்றே இருக்காது. 

பாதுகாப்பு: மற்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்களைக் காட்டிலும் Li-Fi அதிக பாதுகாப்பு நன்மைகளை வழங்குகிறது. ஏனெனில் ஒளி சிக்னல்கள் சுவர்களில் ஊடுருவாது என்பதால், பிறரால் ட்ராக் செய்யப்பட்டு தரவுகள் திருடப்படுவதில் இருந்து அதிக பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் இதை மின்காந்த ஆற்றல்கள் எதிர்க்க முடியாது என்பதால், மருத்துவமனை அல்லது தொழில்துறை போன்ற இடங்களில் நம்பகமான சூழலை ஏற்படுத்துகிறது. 

இதையும் படியுங்கள்:
Must Have Skills: இந்த 3 திறன்கள் இல்லாமல் உங்களால் வாழ்வில் வெற்றியடைய முடியாது!
Li-Fi technology

பயன்பாடுகள்: Li-Fi தொழில்நுட்பமானது பல இடங்களில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஹெல்த் கேர் துறையில், சிக்னல்களில் எந்தக் குறுக்கிடும் இருக்கக்கூடாத இடங்கள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற பகுதிகளில் இவற்றைப் பயன்படுத்தலாம். டிஜிட்டல் துறைகள், அதிவேக டிஜிட்டல் தொடர்பு வழங்கும் துறைகள் போன்ற இடங்களில் Li-Fi சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தும். வாகனங்களில் நிகழ் நேர தொடர்புக்கு வழி செய்தால், போக்குவரத்து துறையிலும் லைப்பை புரட்சியை ஏற்படுத்தும். 

இப்படி இந்தத் தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருப்பினும் இந்த தொழில்நுட்பம் தற்போது அதன் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், இது எப்போது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பதை இப்போது சொல்ல முடியாது. இருப்பினும் எதிர்காலத்தில் வயர்லெஸ் தகவல் தொடர்பு அமைப்பில் Li-Fi நம்பகமான ஒன்றாக இருக்கும் என்கின்றனர் வல்லுனர்கள்.    

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com