Wi-Fi Internet speed  increase trick!
Wi-Fi Internet speed increase trick!

உங்க Wi-Fi பக்கத்துல இத வச்சா  போதும் நெட் ஸ்பீடு அள்ளும்!

உங்கள் வீட்டில் WiFi கனெக்ஷன் உள்ளதா? அதில் இணைய வேகம் குறைவாக இருப்பது போல் உணர்கிறீர்களா? இனி கவலை வேண்டாம். இந்த பதிவில் நான் சொல்வது போல செய்தால் இணைய வேகம் டாப் ஸ்பீடில் இருக்கும். 

என்னதான் WiFi-ல் இணையவேகம் நன்றாக இருக்கும் என நாம் அதை பொருத்தினாலும், நாம் எதிர்பார்க்கும் இணைவேகம் அதில் சரியாகக் கிடைப்பதில்லை. எனவே இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டும் என பலர் விரும்புவார்கள். நிறுவனம் சொல்லும் இணைய வேகத்தை விட உங்களுக்கு குறைவாகவே வரும்போது, பல தந்திரங்களை பயன்படுத்தி இணைய வேகத்தை நாம் அதிகரிக்க முடியும். இதுபோன்ற தந்திரங்கள் பலது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் மிகப் பிரபலமாக சொல்லப்படும் ஒரு ட்ரிக் தான், அலுமினியம் ஃபாயிலைப் பயன்படுத்தி இணைய வேகத்தை அதிகரிக்கலாம் என்ற ட்ரிக். இதை செய்வது மிகவும் எளிதுதான். நீங்கள் வைஃபை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்காக உங்கள் வீட்டில் ரௌட்டர் பொருத்திருப்பார்கள். அதன் பின்னால் இந்த அலுமினிய காகிதத்தை வைக்க வேண்டும். இது உங்கள் WiFi-க்கு வரும் சிக்னலை அதிகரித்து வேகத்தை கூட்டும் என சொல்லப்படுகிறது. 

இதன் மூலமாக ரௌடரின் உட்புற வயர்லெஸ் சிக்னல் மேம்படுத்தப்பட்டு, வெளியே வரும் நெட்வொர்க் கவரேஜ் அதிகரிக்கும் என்கின்றனர். உண்மையிலேயே வைஃபை ஆன்டனாவின் அருகில் வைக்கப்படும் அலுமினிய காகிதமானது சிக்னலின் Frequency-யை அதிகரிக்கும் என்கின்றனர். இதன் மூலமாக இணைய வேகம் அதிகரிக்கத் தொடங்கும். 

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Wi-Fi Internet speed  increase trick!

இதன் மூலமாக சில இடங்களில் வயர்லெஸ் சிக்னல் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை முயற்சித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com