உங்க கார் சாவியை இனிமேல் அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுத்தி வைங்க.. ஏன்னு தெரிஞ்சா உடனே செய்வீங்க!

wrap-car-keys-in-aluminum-foil
wrap-car-keys-in-aluminum-foil
Updated on

புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியில் இருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல். இப்போது வரும் கார் திருடர்கள் முன்பை போல கண்ணாடியை உடைப்பதில்லை அல்லது லாக்கை உடைத்து சத்தம் போடுவதில்லை. மிக மிக சத்தமில்லாமல் நைசாக உங்கள் காரை நொடிப்பொழுதில் அபேஸ் செய்து விடுகிறார்கள். 

இதைத் தடுக்க பல வெளிநாடுகளில் மக்கள் தங்கள் கார் சாவியை வீட்டில் இருக்கும் அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுற்றி வைக்கும் பழக்கத்தை அதிக அளவில் தொடங்கியுள்ளனர். இது பார்ப்பதற்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்தாலும், இதன் பின்னால் ஒரு பெரிய அறிவியல் காரணம் இருக்கிறது.

ஹைடெக் திருட்டு நடப்பது எப்படி?

இப்போது வரும் பெரும்பாலான கார்களில் ஸ்மார்ட் கீ எனப்படும் தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது. அதாவது சாவியை பாக்கெட்டில் வைத்தபடியே காரின் கதவை திறந்து கொள்ள முடியும். இந்த சாவிகள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட ரேடியோ சிக்னலை காருக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். 

நீங்கள் சாவியை வீட்டின் ஹாலில் உள்ள டேபிளில் வைத்திருந்தாலும், அந்த சிக்னல் கதவு அல்லது ஜன்னல் வழியாக வெளியே கசிந்து கொண்டிருக்கும். திருடர்கள் வீட்டின் வெளியே நின்றபடி ஒரு சிறிய டிஜிட்டல் கருவியை வைத்து இந்த சிக்னலை ஈசியாக கேட்ச் செய்து, காரின் லாக்கை திறந்து விடுகிறார்கள். இதற்கு ரிலே அட்டாக் என்று பெயர்.

சில்வர் ஃபாயில்!

இந்த ஹைடெக் திருட்டை தடுக்கத்தான் மக்கள் தங்களது சமையலறையில் உணவுப் பொருட்களை மடிக்க பயன்படுத்தும் அலுமினியம் ஃபாயில் பேப்பரை ஒரு சூப்பரான ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். சாவியை இந்த பேப்பரில் சுற்றி வைக்கும்போது அது ஒரு தடுப்பான் போல செயல்படுகிறது.

அதாவது எந்த ஒரு மின்காந்த அலைகளையும் வெளியே விடாமல் தடுக்கும் ஒரு சிறப்பான கவசம் போல இது மாறிவிடுகிறது. இதனால் சாவியில் இருந்து வரும் சிக்னல் முடக்கப்பட்டு, திருடர்களின் கருவிகளால் அதை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.

இதையும் படியுங்கள்:
'ரெடிமேட் பிளவுஸ்' வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
wrap-car-keys-in-aluminum-foil

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

வெறும் பேப்பரை சுற்றிவிட்டோம் என்று நாம் அசால்ட்டாக இருந்துவிட முடியாது. சாவியை சுற்றும்போது எந்த ஒரு சின்ன இடைவெளியும் இல்லாமல் மிகவும் இறுக்கமாக மடிக்க வேண்டும். அப்படி சுற்றிய பிறகு காரின் அருகே சென்று கதவு திறக்கிறதா என்பதை நீங்களே ஒருமுறை செக் செய்து கொள்வது நல்லது. அதேபோல சாவியை எப்போதுமே ஜன்னல் அல்லது மெயின் கதவின் அருகில் வைக்கும் பழக்கத்தை உடனே மாற்றி விடுங்கள்.

கார் தயாரிக்கும் நிறுவனங்களும் இந்த திருட்டை தடுக்க புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருகிறார்கள். அல்ட்ரா வைடு பேண்ட் மற்றும் மோஷன் சென்சார் போன்ற வசதிகளை புதிய சாவிகளில் அவர்கள் பொருத்துகிறார்கள். இது சாவி அசையாமல் இருந்தால் சிக்னலை ஆஃப் செய்துவிடும். ஆனாலும் இது எல்லா கார்களிலும் கிடையாது என்பதால், கடைகளில் சிக்னலை தடுக்கும் பிரத்யேக பவுச்கள் கிடைக்கின்றன, அவற்றை வாங்கி பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை தரும்.

இதையும் படியுங்கள்:
இடைத்தரகர் இல்லாத டிஜிட்டல் புரட்சி! பிளாக்செயின் தொழில்நுட்பம் என்றால் என்ன?
wrap-car-keys-in-aluminum-foil

நவீன தொழில்நுட்பம் நமக்கு எவ்வளவு வசதிகளை கொடுக்கிறதோ அதே அளவு ஆபத்துகளையும் மறைமுகமாக கொண்டு வருகிறது. உங்களது பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை பாதுகாக்க இந்த மாதிரியான ஸ்மார்ட் வழிகளை கையாளுவது தற்போது அவசியமாகிவிட்டது. திருடர்கள் எவ்வளவு தான் அப்டேட் ஆனாலும், நாம் அவர்களை விட ஒரு படி மேலாக யோசிப்பது தான் நமது உடைமைகளை பாதுகாக்கும். 

logo
Kalki Online
kalkionline.com