இந்த ஷு போட்டுக்கிட்டா 250 மடங்கு வேகமா நடக்கலாம்.

இந்த ஷு போட்டுக்கிட்டா 250 மடங்கு வேகமா நடக்கலாம்.
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

வேகமாக நடக்க உதவும் Moonwalker என்ற ஷுவின் வீடியோ டிக் டாக்கில் வைரலாகி 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் விலை 1400 டாலர்கள் என்றாலும், இது அனைவருக்கும் வடிவுமைக்கப் பட்டுள்ளது என்கிறார் இதன் நிறுவனர். 

பொதுவாக நமக்கு உடம்பு சரியில்லை என்றால், நடக்கவே மிகவும் கடினமாக இருக்கும். அதுபோன்ற சூழ்நிலைகளை சிறப்பாக எதிர்கொள்ள வந்திருக்கும் சாதனம்தான் 'மூன்வாக்கர்'. சக்கரங்கள் பொருத்தப் பட்டிருக்கும் இந்த காலணியை மாட்டிக் கொண்டால், நீங்கள் சாதாரணமாக நடக்கும் விசையைக் கொடுத்தாலே வேகமாக பயணிக்க முடியும். அதாவது நீங்கள் சாதாரணமாக நடக்கும் வேகத்தை விட இந்த சாதனத்தைப் பயன்படுத்தி 250 மடங்கு வேகமாக உங்களால் நடக்க முடியும். 

டிக் டாக்கில் இந்தக் காலனியை பயன்படுத்தி சிலர் நடக்கும் வீடியோ, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய வைரலானது. இதுவரை இந்தக் காணொளி 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி சாதாரணமாக ஒரு நபரால் மணிக்கு மூன்று மைல் வேகத்தில் நடக்க முடியும். அதே சமயம் ஒரு மணி நேரத்தில் 7 மைல்கள் வரை இதைப் பயன்படுத்தி ஒருவர் செல்லலாம் என சொல்லப்படுகிறது. 

இந்த காலணிகள் ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கும் என்பதால், நீங்கள் எவ்வளவு வேகமாக நடப்பதற்கான விசையை தருகிறார்களோ, அதற்கு ஏற்றவாறு வேகமாக காலணிகள் உங்களை நடக்க வைக்கும். Moonwalker இந்த உலகத்திலேயே அதிவேகக் காலனி என்று இதன் நிறுவனர் தெரிவிக்கின்றார். 

இதை உருவாக்கியவரின் பெயர் ஜாங். இவருக்கு ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங் பின்னணி உள்ளது. கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் மெக்கட்ரானிக்ஸ் முதுகலைப் பட்டம் பெற்று, rolls-royce நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். முன்வாக்கரை உருவாக்க அவர் ரேஸ் கார் பொறியாளர்கள், ரோபோடிக்ஸ் மற்றும் வடிவமைப்பாளர்களின் குழுவை ஒன்றாக இணைத்தார். இந்தக் குழுவினர் வெறும் ஐந்தே ஆண்டுகளில் மூன்வாக்கரை உருவாக்கினார்கள். 

'ஃப்ரீ வீலிங்' இல்லை என்பது மூன்வாக்கர்களின் மிகப்பெரிய பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும். நீங்கள் நடக்கவில்லை என்றால் அதன் சக்கரங்கள் ஒருபோதும் சூழலாது. இந்த காலணிகள் ஒரு மேக்னடிக் பிரேக் மூலமாக பாதுகாக்கப்படுகிறது. எனவே இதை பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது எனக் கூறப்படுகிறது.

15 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை இந்தக் காலணி முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இதை பயன்படுத்திய பெரும்பாலான நபர்கள் அவர்களின் காலில் மாட்டிய 10 முதல் 15 நிமிடங்களில் திறமையாக நடக்கக் கற்றுக்கொண்டனர். தற்போது இந்த சாதனம் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ஒரு ஜோடி 1399 டாலர்கள் மட்டுமே. 

இறுதியில் "எளிமையான பாதசாரிக்கும் உதவும்படியான ஒரு சாதனத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். இது அனைவருக்குமான சாதனம்" என இதை உருவாக்கியவர் கூறுகிறார்.

logo
Kalki Online
kalkionline.com