Zebronics Wattz 60CC4 Type-C Cable
Zebronics Wattz 60CC4 Type-C Cable

சாவிகள் பாதுகாப்புக்கு மட்டுமல்ல... டெக்னாலஜி தந்த பயனுள்ள கீ செயின்கள்!

Published on

அந்தக் காலத்தில் சாவிக்கொத்து யாரிடம் இருக்கிறதோ அவரே அவ்வீட்டில் தலைமையாளராக இருப்பது வழக்கம். அதிலும் பெண்கள் இந்த சாவிக்கொத்து அந்தஸ்துக்கான முன்னுரிமை பெற குடும்பக் கலவரங்களிலும் சமயங்களில் ஈடுபட்டதாக சொல்வதுண்டு.

ஆனால் இப்போதைய மாடர்ன் யுகத்தில் சாவிக்கொத்து மாற்றம் பெற்று பல்வேறு வகைகளில் உருவாக்கப்படுகின்றன. பொதுவாக எந்த ஒரு மலிவான பரிசளிப்புக்கு உகந்ததாக இருப்பது கீ செயின் தான் என்பதால் இதன் மீதான மோகம் பலருக்கும் உண்டு. கீ செயின் சேகரிப்பில் மகிழ்பவர்களும் உண்டு. சமீபமாக இந்த கீ செயின் டெக்னாலஜி ரீதியான பலன்களைத் தரும் விதமாக இணையதளம் மற்றும் பொது மார்க்கெட்டில் கிடைக்கிறது.

அதற்கு முன் கீ செயின் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை பார்ப்போம்.

பண்டைய காலங்களில் (Ancient civilizations) வீடுகள், கோயில்கள், அரண்மனைகள் ஆகியவற்றுக்கு பெரிய பெரிய இரும்பு அல்லது வெண்கல சாவிகள் பயன்படுத்தப்பட்டு

அந்த சாவிகளை கயிறு அல்லது உலோக வளையத்தில் கட்டி வைத்து பாதுகாத்து வந்துள்ளனர். இதுவே கீ செயின் கதையின் ஆரம்பம்.

ரோமப் பேரரசில் (Roman Empire) செல்வந்தர்கள் சாவிகளை இடுப்பில் தொங்க விட அலங்கார வளையங்கள் பயன்படுத்தியதாகவும் பண்டைய சீனாவில் சாவி வளையங்கள் சமூக அந்தஸ்தின் அடையாளமாக இருந்ததாகவும் குறிப்புகள் உண்டு.

தொழில்துறை புரட்சி (18–19ம் நூற்றாண்டு) காரணமாக பூட்டுகள் சிறியதாக மாறி சாவிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஒரே வளையத்தில் பல சாவிகளை வைத்திருக்கும் தேவை உருவானது. இதனால் Metal key ring பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது.

இதையும் படியுங்கள்:
இன்று விடுப்பு எடுக்கக் கூடாது..! தமிழக அரசின் தலைமை செயலர் முக்கிய எச்சரிக்கை!
Zebronics Wattz 60CC4 Type-C Cable

20ம் நூற்றாண்டுகளில் விளம்பர பொருளாக உருவெடுத்தது கீ செயின்.

1900களில் கம்பெனிகள், கடைகள் தங்கள் பெயர்/லோகோ அச்சிட்ட கீ செயின்களை அன்பளிப்பாக வழங்க ஆரம்பித்தன.பிளாஸ்டிக், ரப்பர், தோல் போன்ற புதிய பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

இந்த நவீன காலத்தில் கீ செயின் ஃபேஷன் & ஸ்டைல் ஐட்டம், கிஃப்ட் என பலவிதமான வடிவங்கள் (Anime, Movie, God idols, Mini tools) என வளர்ந்துள்ளது.

1869ல் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டதுதான் உலகின் முதல் பேட்டண்ட் செய்யப்பட்ட Key Ring என்கின்றனர்.அதிர்ஷ்டமாக சிலரால் பார்க்கப்படும் கீ செயின்கள் வித்தியாசமான (Unique) வகையில் நிறைய இருக்கின்றன. அதில் சில க்ரியேட்டிவ் வகைகள் இதோ:

அவசரத்தில் உதவும் ஸ்க்ரூ டிரைவர், நெயில் கட்டர், பாட்டில் ஓப்பனர் உடன் இருக்கும் மினி டூல் கீ செயின், LED லைட் கீ செயின் , இருட்டில் பயன்படும் சிறிய டார்ச் உடன், குழந்தைகள் விளையாட பட்டன் அழுத்தினால் பாடல்/சவுண்ட் வரும் மாடல், பெயர் / போட்டோ பதித்த கஸ்டமைஸ் கீ செயின், க்யூ ஆர் கோடு மூலம் Emoji, Cartoon, Mini dolls உருவங்கள், ஸ்மார்ட் கீ செயின் (Anti-lost)

இதையும் படியுங்கள்:
மன அழுத்தம் ஒரு நோயல்ல... அது ஒரு எச்சரிக்கை! எப்படி மீள்வது?
Zebronics Wattz 60CC4 Type-C Cable

எதிர்பாராமல் கீ தொலைந்தால் mobile-ல் எச்சரிக்கை alert தரும் Bluetooth tracker, GPS / Smart Tracker Keychain , மினி கேம்ஸ் கீ செயின் இப்படி பல விதங்களில் தற்போது Amazon / Flipkart

Meesho (Budget options) போன்ற தளங்களிலும் Local gift shops Instagram / WhatsApp ல் வரும் small businesses (Custom designs) நபர்களிடமும் ஆர்டர் செய்து பெறலாம்.

தற்போது PD 60 Watts சப்போர்ட் உடன் உறுதியான வகையில் Type-C கேபிள் சாவிகளை பாதுகாக்க மட்டும் அல்லாமல் சிறு பட்டன் அழுத்தினால் வரும் இரண்டு சார்ஜிங் கேபிள் உடன் பயனுள்ள புதிய தயாரிப்பாக (Zebronics) சந்தைகளில் அறிமுகம் ஆகியுள்ளது. இணையத்தில் தேடிப்பிடித்து வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com