

நீங்கள் பயணம் செய்யும்போது உங்கள் பையில் ஐபோனுக்கு ஒரு வயர், ஆண்ட்ராய்டுக்கு ஒரு வயர், சிம் கார்டு மாற்றத் தேட வேண்டிய Ejector Pin, இயர்பட்ஸ் சுத்தம் செய்யத் தனியாக ஒரு கருவி. இப்படிப் பல பொருட்களைத் தேடித் தேடி எடுத்து வைப்பதற்குப் பதிலாக, இவை அனைத்தும் ஒரே ஒரு சிறிய பெட்டிக்குள் அடங்கினால் எப்படி இருக்கும்?
அந்தக் கனவை நிஜமாக்கியிருக்கிறது ஜெப்ரானிக்ஸ். உங்களின் பயணங்களை எளிதாக்கவே அறிமுகமாகியிருக்கிறது "Zebronics ZEB-TRAVMATE 100".
இந்தச் சாதனத்தின் முக்கிய சிறப்பம்சமே இதன் வயர்லெஸ் சார்ஜிங் வசதிதான். இதில் 15W மேக்சேஃப் (MagSafe) வயர்லெஸ் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபோன் பயனர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம். சார்ஜ் செய்துகொண்டே போனைப் பயன்படுத்த வசதியாக இதில் ஒரு மொபைல் ஸ்டாண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
"என்னிடம் ஐபோன் இல்லை, ஆண்ட்ராய்டு தான் இருக்கிறது" என்று கவலைப்படுபவர்களுக்கும் இதில் தீர்வு உண்டு. இதனுள்ளே 60W பவர் டெலிவரி செய்யக்கூடிய Type-C to Type-C கேபிள் உள்ளது. அதுமட்டுமின்றி, லைட்னிங் Lightning, மைக்ரோ Micro USB மற்றும் USB-A என அனைத்து வகை போர்ட்களுக்கும் ஏற்ற கன்வெர்ட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு கேபிள் மூலம் லேப்டாப், டேப்லெட், மொபைல் என எதை வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
சுத்தம் மற்றும் சுகாதாரம்!
பொதுவாக நாம் பயன்படுத்தும் இயர்பட்ஸ் மற்றும் கீபோர்டுகளின் இடுக்குகளில் அழுக்கு சேர்வது சகஜம். இதைச் சுத்தம் செய்ய நாம் எதையாவது தேடுவோம். ஆனால், இந்த டிராவல் மேட் 100-ல், 7 வகையான கிளீனிங் டூல்கள் அடங்கிய தொகுப்பு உள்ளது. உங்கள் ஸ்கிரீன், ஸ்பீக்கர் துளைகள் மற்றும் சார்ஜிங் போர்ட்களைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள இது உதவுகிறது.
வெளிநாடு செல்பவர்கள் சிம் கார்டுகளை மாற்றும்போது, பழைய சிம்மை எங்கே வைப்பது என்று தெரியாமல் தொலைத்துவிடுவார்கள். இந்தக் கருவியில் இரண்டு நானோ சிம் (Nano SIM) மற்றும் மெமரி கார்டுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பிரத்யேக இடங்கள் உள்ளன. கூடவே சிம் எஜெக்டர் பின்னும் உள்ளது. அவசரத்திற்கு முகம் பார்க்க ஒரு சிறிய கண்ணாடியும் இதில் இருப்பது கூடுதல் சிறப்பு.
யாருக்கு இது அவசியம்?
ஒரே நேரத்தில் பல சாதனங்களைப் பயன்படுத்தும் டெக் பிரியர்கள்.
அடிக்கடி பயணம் செய்யும் டிராவல் Vloggers.
சார்ஜர் வயர்கள் பையில் சிக்கிக் கொள்வதை வெறுப்பவர்கள்.
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டையும் வைத்திருப்பவர்கள்.
சந்தையில் சார்ஜர் தனியாக, கிளீனிங் கிட் தனியாக, சிம் பாக்ஸ் தனியாக வாங்கினால் ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, உங்கள் உள்ளங்கையில் அடங்கும் ஒரு சிறிய பெட்டியாக, மிகக் குறைந்த விலையில் ஜெப்ரானிக்ஸ் வழங்குகிறது. இது ஒரு பவர் பேங்க் அல்ல என்றாலும், உங்களின் அனைத்து கேட்ஜெட் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு Life Saver.
உங்கள் அடுத்த பயணத்திற்குத் தயாராகும் முன்பு, மறக்காமல் இந்தப் பொருளை உங்கள் கார்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் பயண அனுபவத்தை நிச்சயம் மாற்றும்.