
Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த புதன்கிழமை அன்று, AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் புதிய அளவிலான அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட்டார். ஆனால் வெளியீடு ஜுக்கர்பெர்க் எதிர்பார்த்த அளவுக்கு சுமூகமாக நடக்கவில்லை என்றே கூறலாம்.
Meta நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடான "மெட்டா கனெக்ட்"-ல், ரே-பான் மற்றும் ஓக்லியுடன் இணைந்து பல்வேறு சாதனங்களை ஜுக்கர்பெர்க் அறிமுகம் செய்து வைத்தார். சிறிய கை சைகைகளுடன் செய்திகளை அனுப்புவது போன்ற பணிகளைச் செய்ய பயனர்களை அனுமதிக்கும் வகையில், அதனுடைய மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே கண்ணாடிகளுடன் இணைக்கும் ஒரு நரம்பியல் மணிக்கட்டு பட்டையையும் இந்த நிறுவனம் மாநாட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த தொழில்நுட்பத்தை "மிகப்பெரிய அறிவியல் முன்னேற்றம்" என்று ஜுக்கர்பெர்க் பாராட்டி பேசினார்.
Meta AI கண்ணாடிகளின் நேரடி Demo வில் என்ன நடந்தது??
Meta AI கண்ணாடிகள் டெமோ தவறாகப் போகிறது என்று தெரிந்த போதிலும் பார்வையாளர்களின் கவனத்தை மெட்டாவின் CEO அவர்கள் சாதுர்யமாகவே திசை திருப்பினார். இரண்டு நேரடி demoகளுமே வெற்றியை தரவில்லை என்றே சொல்லலாம்.
முதலாவதாக, நேரடி டெமோ ஒன்றில், சமையல்காரர் ஜாக் மான்குசோ இரண்டாம் தலைமுறை ரே-பான் மெட்டா கண்ணாடிகளின் AI உதவியாளரைப் பயன்படுத்தி ஒரு செய்முறையைப் பின்பற்ற முயற்சித்தார். இருப்பினும், AI பல முறை தவறான வழிமுறைகளை வழங்கியது மற்றும் ஏற்கனவே முடிக்கப்பட்ட படிகளை மீண்டும் மீண்டும் பரிந்துரைத்தது.
மான்குசோ இந்த தவறிற்கு வைஃபை கோளாறு தான் காரணம் என்று குற்றம் சாட்டினார், அதே நேரத்தில் ஜுக்கர்பெர்க், "முழு விஷயத்தின் முரண்பாடு என்னவென்றால், நீங்கள் தொழில்நுட்பத்தை உருவாக்க பல ஆண்டுகள் செலவிடுகிறீர்கள், ஆனாலா அந்த நுட்பத்தை நிறைவேற்றும் நாளிலேயே வைஃபை உங்களை படுத்துகிறது” என்று கேலி செய்தார்.
கண்ணாடிகளின் வீடியோ அழைப்பு அம்சத்தின் டெமோவின் போது இரண்டாவது கோளாறு ஏற்பட்டது. மெட்டா நிறுவனத்தின் CTO, ஆண்ட்ரூ போஸ்வொர்த்துடன் வாட்ஸ் அப் call-ல் பேச ஜுக்கர்பெர்க் முயற்சித்தார், ஆனால் அவரது நியூரல் பேண்ட் இடைமுகம் அழைப்பைப் பதிவு செய்யத் தவறிவிட்டது. பலமுறை முயற்சி செய்து தோல்வி அடைந்த பிறகு, போஸ்வொர்த் அவருடன் மேடையில் சேர்ந்து, "இந்த வைஃபை மிகவும் கொடூரமானது” என்று கேலி செய்தார். ஜுக்கர்பெர்க் "நீங்கள் புதிய விஷயங்களை 100 முறை பயிற்சி செய்திருந்தாலும் அதை மேடையில் ஏற்றும் வேளையில் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியாது” என்று பேசி சமாளித்தார்.
பிறகு, சர்ஃப் போர்டை வடிவமைக்கவும் பாகங்களை ஆர்டர் செய்யவும் கண்ணாடிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை காட்டும் முன் பதிவு செய்யப்பட்ட வீடியோவை ஜுக்கர்பெர்க் இயக்கினார். இவை எல்லாம் உண்மையில் நேரடி டெமோக்களில் வேலை செய்கிறதா இல்லையா என்பது குறித்த கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முகவர் AI உடன் கண்ணாடிகள் எவ்வாறு செயல்படும் என்பதை மட்டுமே அவர் கூறினார். இந்த நிகழ்வின் போது, ஜுக்கர்பெர்க் $499 (Rs. 43,989) மதிப்புள்ள ஓக்லி மெட்டா வான்கார்டு கண்ணாடிகளையும், $379 (Rs. 33,410) விலையில் இரண்டாம் தலைமுறை ரே-பான் மெட்டா கண்ணாடிகளையும் வெளியிட்டார்.
மெட்டாவின் AI- இயக்கும் ஸ்மார்ட் டிஸ்ப்ளே கண்ணாடிகள்:
மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே, பயனர்கள் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் செய்திகளைப் பார்க்கவும் கூடிய ஒரு லென்ஸில் முழு வண்ண உயர் தெளிவுத்திறன் கொண்ட திரையுடன் வெளி வர இருக்கிறது. இதில் 12 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த டிஸ்ப்ளேவானது இந்த மாதத்தில் மார்க்கெட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இது $799க்கு அதாவது தோராயமாக இந்திய மதிப்பின் படி Rs.70,000 க்கு விற்பனை செய்யப்படலாம் என்று பிபிசியின் அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது.