12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகவிருப்பதால், இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் அதனால் தமிழகத்துக்கு அடுத்த 1 வாரத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது:

தென் மேற்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதனால் தென் தமிழகம், மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com