இணையத்தின் 55 ஆண்டுகாலம்! 

55 years of the Internet!
55 years of the Internet!
Published on

இன்று நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மாறிப் போயிருக்கும் இணையம், அதன் 55 ஆண்டுகால பயணத்தில் பல திருப்புமுனைகளைக் கடந்து, இன்று உலகிலேயே இணைக்கும் ஒரு மாபெரும் சக்தியாக மாறியுள்ளது.‌ ஒரு சிறிய கண்டுபிடிப்பாகத் தொடங்கிய இது, தற்போது மனித வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி, தொடர்புகளை எளிமைப்படுத்தி, தகவல் பரிமாற்றத்தை வேகப்படுத்தி, புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக பொருளாதாரத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது. 

இணையத்தின் தோற்றம்: இணையத்தின் முன்னோடி ARPANET (Advanced Research Project Agency Network) ஆகும். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி நிறுவனமான ARPA, 1969ல் கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு நெட்வொர்க் அமைப்பை உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கியது. இதன் முக்கிய நோக்கம் அணுத்தாக்குதல் போன்ற அவசரகால நிலைகளில் தகவல் தொடர்பை தொடர்ந்து வைத்திருப்பதுதான். ஆரம்பத்தில் இது மிகவும் மெதுவாகவும், குறைந்த அளவிலான தகவல்களை மட்டுமே பரிமாறும் திறன் கொண்டதாக இருந்தது. 

இணையத்தின் வளர்ச்சி: 1980களில் இணையம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக இருந்தது. ஆனால், 1990களில் World Wide Web (WWW) என்ற புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், இணையம் பொது மக்களுக்கும் கிடைக்கத் தொடங்கியது. இது இணையத்தில் உள்ள எல்லா தகவல்களையும் எளிதாக அனுப்புவதற்கு வாய்ப்பை வழங்கியது. இதன் மூலமாக இணையம் ஒரு தகவல் அடங்கிய தளமாக மாறியது. 

1990களின் பிற்பகுதியில் இணையம் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படத் தொடங்கியது. இ-காமர்ஸ், ஆன்லைன் விளம்பரம் மற்றும் சமூக வலைதளங்கள் போன்ற புதிய வணிக மாதிரிகள் உருவாகின. 2000களில் பிராட்பேண்ட் இணையம் பரவலாக கிடைக்கத் தொடங்கியது. இதன் மூலம் இணையத்தின் வேகம் கணிசமாக அதிகரித்து, வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங் மற்றும் வேறு பல இணைய சேவைகள் பிரபலமாயின. 

இணையத்தின் தாக்கம்: 

இணையம் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் நாம் நம் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள இது உதவுகிறது. சமூக வலைதளங்கள், வீடியோ கால் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் போன்ற தொழில்நுட்பங்கள் நம் தொடர்புகளை எளிமைப்படுத்தியுள்ளன. 

இணையம் என்பது இந்த உலகின் மிகப்பெரிய தகவல் கடலாகும். நாம் எந்த ஒரு தலைப்பிலும் தகவல்களை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இது கல்வி, ஆராய்ச்சி, பொதுஅறிவு ஆகியவற்றை முற்றிலுமாக மேம்படுத்தியுள்ளது. மேலும், வணிகத்தை முற்றிலுமாக மாற்றி, இகாமர்ஸ், ஆன்லைன் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதள வணிகம் போன்ற புதிய வணிக மாதிரிகள் உருவாக்கியுள்ளன. 

இதையும் படியுங்கள்:
இணையம் என்னும் பல்கலைக்கழகம் - MOOC (Massive Open Online Course) எனும் வசதி பற்றி தெரியுமா?
55 years of the Internet!

இணையம், கல்வியை அனைவரும் அணுகக் கூடியதாக மாற்றியுள்ளது. ஆன்லைன் படிப்புகள், மொபைல் கற்றல், கல்வி சார்ந்த பயன்பாடுகள் போன்றவை கல்வி முறையை புரட்சிகரமானதாக மாற்றியுள்ளன. மேலும், இணையம் பொழுதுபோக்கின் மையமாக மாறியுள்ளது. வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேம், இன்னிசை மற்றும் பிற பொழுதுபோக்கு சேவைகள் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன. 

இணையத்தின் எதிர்காலம்: 

இணையத்தின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. 5G, 6G போன்ற அதிவேக இணைய தொழில்நுட்பங்கள், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மெட்டாவேர்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் இணையத்தை மேலும் மேம்படுத்தும். எனவே, இணையத்தின் எதிர்காலம் உண்மையிலேயே வளர்ச்சிப் பாதையிலேயே இருக்கக்கூடியதாகும். 

இணையம் மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இது நம் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக இது மேம்பட்டு, நம் வாழ்க்கையை மேலும் எளிதாகவும் வேகமாகவும் மாற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com