ராணுவமே இல்லாத 7 நாடுகளா? அப்போ பாதுகாப்பு எப்படி?
தற்போதைய பரபரப்பான உலகில் அனைத்து நாடுகளும் தங்களுக்கென தனிப்பட்ட ராணுவத்தை கொண்டு உள்ளார்கள். பல நாடுகளும் தங்கள் ராணுவத்தை வெளிப்படுத்த ஆண்டுதோறும் பெரும் தொகையை செலவிடுகிறது. ஒரு நாட்டின் வலிமையும், பாதுகாப்பும் அதன் ராணுவ திறன்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த உலகமும் இந்த பாதையில் பயணிக்கும் போது சில நாடுகள் முற்றிலும் வேறு பாதையை தேர்ந்தெடுத்து அந்த பாதையில் பாதுகாப்பாக செல்கிறது. ஏனெனில் இந்த நாடுகளில் ராணுவம் என்பது கிடையாது. ராணுவம் இல்லாமலேயே இந்த நாடுகள் உலக நாடுகளுடன் நல்லுறவை கொண்டுள்ளன. வியப்பாக உள்ளது தானே! இந்த பதிவில் ராணுவமே இல்லாத உலகின் வினோதமான நாடுகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
ஐஸ்லாந்து:
1869-ம் ஆண்டு முதல் ராணுவம் இல்லாமல் இயங்கி வருகிறது. இருப்பினும் அது நேட்டாவின் உறுப்பினராக உள்ளது. The Crisis Response unit இங்கு அமைதி காக்கும் படையாக செயல்படுகிறது. இது அமெரிக்காவுடன் ஏற்கனவே ஒரு பாதுகாப்பும் கொண்டுள்ளது. 1951 முதல் 2006 வரை ஐஸ்லாந்து பாதுகாப்பு படை மற்றும் ஐஸ்லாந்து மண்ணில் ஒரு ராணுவ தளத்தை நிறுவ வழி வகுத்தது. ராணுவத் தளம் மூடப்பட்ட போதிலும் ஐஸ்லாந்தின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்வதாகவும், நாட்டிற்குள் நிரந்தர படைகளை நிறுத்த வேண்டாம் என்றும் அமெரிக்கா உறுதியளித்தது.
மொரிஷியஸ்:
நிலையான இராணுவம் இங்கு இல்லாவிட்டாலும் மொரிஷியஸில் ராணுவம் காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணிகளை செய்ய சுமார் 10,000 பணியாளர்களைக் கொண்ட ஒரு காவல் படை உள்ளது. காவல் ஆணையரின் கட்டளையின் கீழ் இந்த படை நாட்டிற்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கிறது.
வாடிகன் நகரம்:
ஓப்பின் பாதுகாப்பை கவனிக்க நிறுவப்பட்ட ஒரு ராணுவ இழிவான வாடிகள் நகர அரசியல் அதிகார வரம்பிற்குள் செயல்பட்டு வருகிறது. வாடிகன் அமைதியை பராமரிக்க வடியலுக்கும் இத்தாலிக்கும் இடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லாத பொழுது ஆயுதப்படையில் உரைசார முறை வாழிய நகரத்தை பாதுகாக்கின்றன. The palatine Guard மற்றும் Noble Guard 1970-ல் கலைக்கப்பட்டது. அதன் பின் நகர பாதுகாப்பு ஜென்டர் மேரி கார்ப்ஸிடம் ஒப்படைக்கப்பட்டன.
கோஸ்டாரிகா:
1949-ம் ஆண்டு ஒரு துணிச்சலான நடவடிக்கையாக கோஸ்டாரிகா தனது அழகான ராணுவத்தை நீக்கிவிட்டு தனது மக்கள் நலனில் முதலீடு செய்ய முடிவு செய்தது. இந்த புரட்சிகரமான நடவடிக்கை இந்த நாட்டை உலகளாவிய முன்னோடியாக நிலை நிறுத்தியது. அமைதிப்பாதையைத் தேர்ந்தெடுத்து சக வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்கான மாற்றுமாதிரிக்குச் சென்ற முதல் நாடாக இது மாறியது.
அன்டோரா:
வலிமை வாய்ந்த நட்பு நாடுகளுடன் சர்வதேச ஒப்பந்தங்களை நம்பி அன்டோராவின் ஆயுதப் படைகள் நடைமுறையில் இல்லை. ஸ்பெயின் மற்றும் பிரான்சுடனான ஒப்பந்தங்கள் அன்டோராவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. அதே நேரத்தில் சட்ட ஒழுங்கை அதன் காவல் படை பராமரிக்கின்றனர்.
டொமினிகா:
1981 முதல் டொமினிகா ஒரு நிலையான ராணுவத்தை பராமரிக்கவில்லை. டொமினிகா காமன் வெல்த் காவல்படை சட்ட ஒழுங்கைக் கையாளுகிறது. மேலும் அதிகாரிகளால் இயக்கப்படும் அவசர நிலைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு படைப்பிரிவு மற்றும் கடலோர காவல் படை மட்டுமே இங்கு உள்ளது.
செயிண்ட் லூசியா:
கரீபியனில் அமைந்துள்ள செயின்ட் லூசியா நிலையான ராணுவப்படை இல்லாமல் செயல்படுகிறது. ராயல் செயின்ட் லூசியா காவல் படை சட்ட ஒழுங்கை பராமரிக்கும் முதன்மை சட்ட அமலாக்க நிறுவனமாகச் செயல்படுகிறது. மேலும் கடலோர காவல் படை மற்றும் துணை ராணுவ சிறப்பு சேவை பிரிவு, இங்கு எல்லைகளை பாதுகாக்கிறது.