77 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

77 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

உலகம் முழுவதும் 77 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனாம் தெரிவித்ததாவது:

கொரோனா வைரஸின் மற்ற உருமாறிய வகைகளைவிட ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்றார். தற்போது அதிகாரபூர்வமாக 77 நாடுகளில் ஒமைக்ரான் பரவியிருப்பது தெரிய வந்துள்லது. ஆனால் இதைவிட அதிக எண்னிகையிலான நாடுகளிலும் பரவியிருக்கக் கூடும். ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி போடுவதை உலக சுகாதார அமைப்பு எதிர்க்கவில்லை, ஆனால், இதன் காரணமாக தடுப்பூசி பதுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com