
பேரறிஞா் அண்ணா அவர்தம் பிறந்த நாளில், செப்டம்பர் திங்கள் பதினைந்தில் அவரின் நினைவலைகளோடு வலம் வருவோம். அண்ணா என அன்போடு அழைக்கப்பட்ட அவதார புருஷர் பிறந்த நாளில் அவர்தம் புகழ் பாடுவோம்.
காஞ்சிபுரத்தில் அவதரித்த ஆற்றல்மிகு ஆதிமூலம்.
நடராஜன் பங்காரு அம்மையாாின் நன்முத்து.
நானிலம் போற்றிட வாழ்ந்த நாயகம்.
பண்பாடுகளின் குறியீடு.
தமிழ்பற்று மிகுந்த தகை சால் விருது.
தமிழக்கு உயிா்தந்த தன்னடக்கம்.
சுயமரியாதை காத்திட பாடுபட்ட பார்வேந்தர்.
பத்திாிகைகளில் புதுமைக் கருத்துகளைத் தந்த தடாகம்.
சினிமாமூலம் அற்புத கருத்துகளை தந்த கண்ணியவான்.
கடமை தவறாத காா்மேகம்.
கட்டுப்பாடு காத்த கலங்கரைவிளக்கம்.
நீதிக்கட்சியின் ஓர் அங்கம்.
காங்கிரஸ் அல்லா கட்சியின் முத்தான முதல்வர்.
தென்னாட்டு பொ்னாட்ஷா.
ராஜ்யசபாவில் வாா்த்தை ஜாலம் காட்டிய வாழையடி வாழை.
இருபத்தி ஓராம் வயதில் இல்லறம்.
ராணி அம்மையாருடன் திருமணம்.
6.3.1967 ல் முதல்வரான முத்தழிழ்காவியம்.
மதராஸை தமிழ்நாடாக்கிய தங்கமகன்.
ஆங்கிலப்புலமையில் ஒரு ஆக்ஸ்போா்டுபல்கலை.
ஆரியமாயை கண்ட ஆயுத எழுத்து.
நீதி தேவன் மயக்கம் தந்த நிறைகுடம்.
கம்பரசம் கண்ட கடலோரக்கவிதை.
சமுகநீதி காத்திட பாடுபட்ட சக்கரவர்த்தித்திருமகன்.
இறப்பில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியத் தமிழன்.
பல செயல்பாடுகளால் பன்முகம் கண்ட பத்தரை மாற்றுத்தங்கம்.
அண்ணா எனும் மூன்றெழுத்தின் மூலவர்.
தங்கத்தமிழன், சங்கத்தமிழன், பாா்போற்றும் பரிமாணம்.
3.2.1969ல் இறந்தது பெருந்துயரம்.
இழக்கமுடியா இரும்பு மனிதர்.
ஈடு இணையில்லா போராளி.