
உலக தாய்ப்பால் வாரம்: ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை. உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை ஊக்கப்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-7 வரை தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச கோமாளிகள் வாரம் (International Clown Week) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை - தன்னார்வ நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் கோமாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 4 : நண்பர்கள் தினம்- ஆகஸ்ட் முதல் ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 5 : சர்வதேச மன்னிப்பு தினம்- உலகளாவிய மன்னிப்பு கூட்டணியால் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மன்னிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 6 : ஹிரோஷிமா தினம்- ஹிரோஷிமா தினம் அணு ஆயுத எதிர்ப்பு தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. ஆயுதத்திற்கு எதிரான விவாதங்கள் மற்றும் செயல்பாட்டில் ஹிரோஷிமா தினம் கவனம் செலுத்துகிறது.
ஆகஸ்ட் 7 : தேசிய கைத்தறி தினம்- நாட்டில் கைத்தறி நெசவாளர்களை கௌரவிப்பதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் -7-ம்தேதி தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 8 : சர்வதேச பூனைகள் தினம் - இத்தினம் சர்வதேச விலங்குகள் நல நிதியத்தால் 2002-ம் ஆண்டு மே மாதம் ஏற்படுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 9 : நாகசாகி தினம் - உலக பூர்வகுடிகளுக்கான சர்வதேச தினம்.
ஆகஸ்ட் 10 : உலக உயிரி எரிபொருள் தினம் - புதை படிமம் அல்லாத எரிபொருள் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் 2018ல் தொடங்கப்பட்டது.
ஆகஸ்ட் 12 : சர்வதேச இளையோர் தினம் - மோதல்களை தடுத்தல், அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதி, நீடித்த அமைதி ஆகியவற்றிற்கு இளையோர் ஆற்றும் பங்கை கௌரவிக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினமும் இந்நாளில் கடைபிடிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15 : இந்திய சுதந்திர தினம் - இந்தியாவின் விடுதலையை கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 15, 1947லிருந்து அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 19 : உலக புகைப்பட தினம்- உலகம் முழுவதும் உள்ள புகைப்படம் எடுப்பவர்களை ஊக்குவிப்பதற்காக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 20 : உலக கொசுக்கள் தினம் - 1892ல் கொசுக்கள் மூலம் மலேரியா பரவுவதை ரொனால்டு ரோஸ் கண்டுபிடித்தார். அவரது நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 21 : உலக மூத்த குடிமக்கள் தினம்- மூத்த குடிமக்களின் நிலைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களது நலனை மேம்படுத்த இந்நாளில் செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆகஸ்ட் 22 : மெட்ராஸ் தினம் - 1639 ஆகஸ்ட் 22ல் ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் மதராசபட்டினம் விலைக்கு வாங்கப்பட்டது. அன்று முதல் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 26 : உலக சமஸ்கிருத தினம் - இந்து நாள்காட்டியில் சரவண மாதத்தின் பூர்ணிமா தினமான சரவண பூர்ணிமா அன்று உலக சமஸ்கிருத தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 29 : தேசிய விளையாட்டு தினம் - இந்தியாவின் புகழ்பெற்ற ஹாக்கி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 30 : சிறு தொழில்துறை தினம்- சிறுதொழில் துறைகளை ஆதரவளிக்கும், ஊக்கமளிக்கும் விதமாகவும் ஆண்டு தோறும் 30ம் தேதி சிறு தொழில்துறை தினமாக அனுசரிக்கப்படுகிறது.