பாரதியாரின் தன்னம்பிக்கை வரிகள்!

செப் – 11 பாரதியார் நினைவு நாள்!

Bharathiar Memorial Day
Bharatiyar...
Published on

லையைப் பார்த்து

வியந்து விடாதே...!

மலைமீது ஏறினால்

அதுவும் உன்

காலின் கீழ்தான்..!

லே வேடிக்கை மனிதரைப்போல

நான் வீழ்வேன் 

என்று நினைத்தாயோ...!

வலையும் பயமும் எனக்கு பகைவர்....

நான் இப்பகைவரை

வென்று தீர்த்தேன்....

ப்போதும் கர்வத்துடனே

இரு... இங்கு

யாரும் யாருக்கும்

சளைத்தவர்கள் அல்ல...!

துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த  போதினும்

அச்சமில்லை அச்சமில்லை   அச்சமென்பதில்லையே..

திண்ணிய நெஞ்சம்வேண்டும்...

தெளிந்த நல் அறிவு வேண்டும் ....!

ள்ளத்தில் நேர்மையும்

தைரியமும் இருந்தால்

நடக்கும் பாதையும்

நேரானதாகவே இருக்கும்...!

ரியோ தவறோ வாழ்கின்ற ஒரு வாழ்வை

உனக்குப் பிடித்தபடி

மனச்சாட்சியோடு வாழ்...

தீர்வுகள் சொல்ல இங்கு யாரும் நல்லவரும் இல்லை...

தீர்வுகள் கேட்க நீ கெட்டவனும் இல்லை...!

துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு

சிரிக்கப் பழகுங்கள்

அதுவே... அத்துன்பத்தை

வெட்டும் வாளாகி விடும்.

துன்பம் நேரும்போது  துணிச்சல் எனும்

கடிவாளத்தால் கட்டி

மனக்கு திரையைப் பிடித்து நிறுத்த வேண்டும். இதுவே

சரியான யோகப்பயிற்சி.

வனையும் வெற்று காகிதம் என ஒரு போதும்

எண்ணாதே...

ஒரு நாள் அவன்

பட்டமாய் பறப்பான்

நீயும் அண்ணாந்து

தான் பார்க்க வேண்டும்.

னஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய ஒரு

கடலுக்கு சமமானது...!

காயங்கள் குணமாக

காலம் காத்திரு...

கனவுகள் நினைவாக

காயம் பொறுத்திரு...

இதையும் படியுங்கள்:
பிரச்னைகள் எங்கும் உண்டு... எதிலும் உண்டு!

Bharathiar Memorial Day

ல்வியுள்ளவரே...

கண்ணுள்ளார் எனலாம்...

கல்வியில்லாதவர் கண்

புண்ணென்றே  எனலாம்...

கல்வி மிகுந்திடில்

கழிந்திடும் கடமை....

கற்பதுவே உன் முதற் கடமை....!

னதில் உறுதி வேண்டும்...

வாக்கினிலேயே  இனிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்;

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.

பாரதியார் நினைவு நாளில் அவரையும்

அவரது வீர வரிகள்

கவிதைகளை போற்றி

வணங்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com