இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். முன்னேற்றப் பாதையில் நாட்டை கொண்டு சென்றவர். தமிழ் நாட்டின் மீதும் தமிழக மக்கள் மீதும் அளப்பறிய வாஞ்சைகொண்டவர். இளம் வயதில் பாரதப்பிரதமர் என்ற பெருமையைக் கொண்ட மறைந்த ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 20ம் நாள்.
ராஜீவ் காந்தி 20.8.1944ல் பம்பாயில் பிறந்தாா். பொிய அரசியல் பின்புலம் ,நேருவின் பேரன், இந்தியாவின் இரும்புப் பெண்மணியாம் முன்னாள் பாரதப்பிரமர் இந்திராகாந்தியின் புதல்வர், என்ற பெருமைக்குரியவராக இருந்தபோதிலும் அரசியலில் நாட்டம் கொள்ளாதவராகவே இருந்துவந்தாா்.
அரசியலை விட விஞ்ஞான தொழில்நுட்பத்தில் ஆசை கொண்டு, அயல்நாட்டில் படிப்பை முடித்து, தில்லி விமானக்கழகத்தில் நுழைவுத்தோ்வில் வெற்றி பெற்று இந்தியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தில் விமான ஓட்டியாய் (பைலட்) பணிபுாிந்தவர்.
இத்தாலிய பெண்ணான சோனியாவை மணந்தவர். அவரது சகோதரன் சஞ்சய் காந்தி அமேதி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, வானத்தில் விமான சாகசம் செய்யும் நிலையில், பெரும் விபத்தில் இறந்துபோகவே, கட்டாயமாக அரசியலுக்கு இழுத்துவரப்பட்ட ராஜீவ்காந்தி அமேதி தொகுதியில் தோ்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றாா்.
அதன் பின்னர் 31.10.1984ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இளம் வயதில் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றாா்.
அதோடு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியையும் வகித்தாா். அப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நடைபெற்ற தோ்தலில் அமோக வெற்றி என்பதைவிட வரலாறு காணாத வெற்றி பெற்று இந்திய பிரதமராக தொடர்ந்தாா்.
பல திட்டங்களை கொண்டு வந்தவர். குறிப்பாக 18 வயதுடையவர்களுக்கு ஓட்டுரிமை. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு. மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு. (பஞ்சாயத்துராஜ்) மருந்து தயாாிப்பதில் முன்னனி. போலியோ இல்லாத இந்தியா உருவாக்கியது. சமுதாய நலனுக்காக தொழில்நுட்ப பயன்பாடு. இலங்கைத்தமிழர் பிரச்சனைகளுக்கு தீா்வு.
இப்படி பல சாதனைகளால் இந்தியாவின் தரம் உயர பாடுபட்டாா். அதன்பிறகு 21.5.1991ல் தமிழ்நாட்டிலுள்ள திருப்பெரும்பதூரில் தற்கொலைப்படை மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இறையாகி உயிா் நீத்தாா்.
அவர் பிரதமராக இருந்தபோது நிறைய அளவில் வளா்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டன. அவரது வாாிசுகளான ராகுல் காந்தி, மற்றும் பிாியங்காகாந்தியால் அரசியலில் ஜொலிக்கமுடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை!