
பார்வையற்ற ஆறுபேற்
பார்க்க வந்து யானையை
ஆர்வ மிகுதியால் யானை
அங்கமெங்கும் தடவினர்!
கால்கள் தம்மைத் தடவிய
கண்களற்ற மனிதனோ
கல்தூணைப் போல உள்ளது
கைகள் தடவ யானையும்
என்று எண்ணி இருக்கையில்
நின்ற யானை காதினை
நெருங்கித் தடவிப் பார்த்தவன்
முறம்போல் யானை என்றனன்!
மேனி தன்னை வருடிய
மற்று மொரு மனிதனோ
சுவரைப் போல நிற்குதெனச்
சொல்லுமந்த வேளையில்
வாலை ஒருவன் தடவியே
வருடிப் பார்த்துவிட்டவன்
நீளக் கயிறு அல்லவோ
நிற்கும் யானை என்றனன்.
தும்பிக்கையைத் தடவிய
துடிப்புமிக்க ஒருவனோ
நம்புவீர்கள் யானையும்
நீண்ட உலக்கை என்றனன்..
ஆறுபேரும் இப்படி
அங்கம் தொட்டு உணர்ந்ததை
ஆனை வடிவம் என்றனர்
அத்தனையும் சேர்ந்ததை!
பாரதியாம் மகாகவி
பார்க்கும் உயிர்கள் யாவையும்
ஆவியிலே ஒன்றென
‘அத்வைதம்’ சொன்னதால்!
கழுதை கட்டித் தழுவினான்
கனகலிங்கம் நேசித்தான்
மயிலை யானை தன்னையும்
மனமுவந்து பூஜித்தான்!
உயிர்களிடத்து அன்புசெய
உரைத்துப் போன பாரதி
உயர்வை என்றும் எண்ணியே
உள்ளம் வைத்துப் போற்றுவோம்!