#Breaking: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!

#Breaking: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

காங்கிரஸ் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான . சிதம்பரத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் மத்திய புலனாய்வு துறை சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி டெல்லி,மும்பை சென்னை மற்றும் சிவகங்கையில் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-இதுகுறித்து புலனாய்வுத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப் பட்டதாவது:

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின்  மகனும் எம்பி-யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பான நிறுவனங்களுக்கு 2010 மற்றும் 2014 ஆகிய வருடங்களுக்கு இடையே வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது தொடர்பாக,முன்னாள் அமைச்சர் .சிதம்பரம் மற்றும் அவரது மகன் தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ஏற்கனவே, ஏர்செல்மேக்சிஸ் வழக்கு தொடர்பாக ப. சிதமபத்தின்  வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com