#Breaking : டெல்லி குடியரசு தினவிழா: தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுப்பு !

#Breaking : டெல்லி குடியரசு தினவிழா: தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுப்பு !
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொள்ள தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப் பட்ட அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் இம்மாதம் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் ..சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்ரை மத்திய அரசு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறீத்து மத்திய அரசு தரப்பில் தெரிவித்ததாவது;

தமிழகம் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே பரிச்சயமாக உள்ளது. அந்நிகழ்ச்சியில் பங்குபெறூம் உலக தலைவர்களுக்கு ..சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளூக்கு மட்டுமே அனுமதி வழங்க இயலும்.

இவ்வாறூ மத்திய அரசு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழகம் மட்டுமல்லாமல் மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com