#BREAKING: இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை!

#BREAKING: இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளீயிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

பண்டிகைகால தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் இன்று (அக்டோபர் 13) நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும். மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று (13.10.2021) மட்டுமே வழங்கப்படும்.

கொரோனா தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com