1178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம் இங்குதான் உள்ளது! எங்கு?

Chenab Railway Bridge
Chenab Railway Bridge
Published on

இந்தியன் ரயில்வே - அறிந்ததும் அறியாததும்!

ரயிலில் நாம் அனைவரும் ஒரு முறையாவது பயணம் செய்திருப்போம். இந்தியாவின் அணைத்து மூலைமுடுக்கையும் இணைக்கிறது ரயில் சேவை. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் எல்லாரையும் ஒரே நேரத்தில், ஒற்றை இலக்கை குறிக்கோளாய் கொண்டு சேர்கின்றது இந்த ரயில் வண்டி. வசதிகள் மாறுபடலாம் ஆனால் போகும் வழியும் ஆகும் நேரமும் அனைவருக்கும் ஒன்று தான். இப்படி நம்மைச் சுமந்து கொண்டுசெல்லும் தொடர்வண்டியைப்பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் அறிந்து கொள்வோமா?

● இந்தியன் ரயில்வே, உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய தொழில்துறை நிறுவனம். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழில்துறை நிறுவனம்.

● இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய வழித்தடங்களைக் கொண்டது. இதன் மொத்த தூரம் அறுபத்தெட்டாயிரம் கிலோமீட்டர் ஆகும். அதில் நாற்பத்தைந்தாயிரம் கிலோமீட்டர் மின்சாரத்தால் இயக்கப்படுகிறது.

● 1853ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள போரி பந்தர் என்னும் இடத்திலிருந்து தானே வரை முதன் முதலில் பயணிகள் சேவை ஆங்கிலேய அரசாங்கத்தால் துவங்கப்பட்டது. இதன் மொத்த தூரம் முப்பத்தினான்கு கிலோமீட்டராகும்.

● உலகின் மிக நீளமான நடைமேடையாக இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் ரயில்வே நிலையம் இருந்தது. இந்த நடைமேடை மொத்தம் 1,366 மீட்டர் ஆகும். இதனை தற்பொழுது கர்நாடகாவில் உள்ள ஹூப்ளி எனப்படும் ஹுப்பாளி ரயில் நிலையம் முறியடித்துள்ளது. இதனுடைய நீளம் 1507மீ ஆகும். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

● ஹௌரா சந்திப்பு தான் இந்தியாவின் மிகப் பழமையான ரயில் நிலையமாகும். இது தான் இந்தியாவின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமாகும். மொத்தம் இருபதிமூன்று ரயில் பாதைகளும், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளைத் தினமும் கையாளுகிறது இந்த ரயில் நிலையம்.

● ஜம்மு காஷ்மீரில் உள்ள பிர் பிராஞ்சல் என்னும் ரயில் சுரங்கப்பாதை தான் இந்தியாவின் நீண்ட ரயில் சுரங்கப்பாதை ஆகும். இதன் தொலைவு 11.25 கிலோமீட்டராகும்.

● இந்தியன் ரயில்வேயின் சின்னம் 'போலு' என்றழைக்கப்படும் 'கார்டு உடை' அணிந்த யானை ஆகும். இந்திய ரயில்வேயின் 150வது வருட கொண்டதத்தின் போது இந்தியத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
அண்டை நாடுகளை இணைக்கும் 7 ரயில் நிலையங்கள் தெரியுமா?
Chenab Railway Bridge

● உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் ரயில் பாலம் ஆகும். செனாப் நதியின் மேல் 1178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது இந்த பாலம்.

● தெற்கு ஆசியாவின் நீண்ட தூர ரயில் சேவை தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி முதல் அசாமில் உள்ள திப்ருகார் வரை ஆகும். இதன் மொத்த தூரம் 4,286 கிலோமீட்டர். இந்த தூரத்தைக் கடக்க 82 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.

● இந்தியாவின் அதிவேக ரயில் புதுடெல்லி - போபால் இடையேயான சதாப்தி ஆகும். 150 கிமீ வரை வேகத்தில் செல்லக்கூடியது இந்த ரயில். மிகவும் நிதானமாகச் செல்லக்கூடியது மேட்டுப்பாளையம்-ஊட்டி செல்லும் நீலகிரி பயணிகள் ரயில் ஆகும். இதன் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 10 கிமீ ஆகும். இந்த ரயில் மலைப் பாதையில் செல்வதால் இந்த இரண்டு இடங்களுக்கு இடையேயான 46 கிமீ கடப்பதற்கு ஐந்து மணி நேரம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com