பாபா வங்கா கணித்த 2026 பேரழிவு உண்மையா? பூமியின் கடைசி புத்தாண்டு எது?

அதிர வைக்கும் உண்மை: 2026-ல் பூமிக்கு 454 கோடி வயதா? மனிதர்கள் அறியாத ரகசியம்! அறிவியல் சொல்வது என்ன?
happy new year
happy new year
Published on

பூமியில் புத்தாண்டு கொண்டாட்டம் எல்லாம் எப்போது தொடங்கியது? Happy New Year என்ற வாசகம் எப்போது தொடங்கியது? பூமியின் வயதிற்கும் இந்த புத்தாண்டிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? நம் பூமியின் வயது என்ன?

உலகின் ஒட்டுமொத்த மனிதகுலமும் 2026-ஆம் ஆண்டின் துவக்கத்தை வரவேற்க இருக்கும் வேளையில்; நம் பூமியும் ஒரு அசாதாரணமான மைல்கல்லை எட்டுகிறது. தோராயமாக 4.54 பில்லியன் ஆண்டுகள் (454 கோடி) என்ற வயதை நம் பூமி அடைகிறது. இது பல தசாப்த கால அறிவியல் ஆய்வுகளின் (decades of scientific inquiry) படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் கதிரியக்க காலக்கணிப்பு முறையின் (radiometric dating) மூலம் குறிப்பாக பழங்கால தாதுக்கள் (ancient minerals), விண்கற்களில் (meteorites) உள்ள யுரேனியம்-ஈய ஐசோடோப்புகளை (uranium-lead isotopes) ஆய்வு செய்வதன் மூலம் பூமியின் வயதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் மிகப் பழமையான நிலப்பரப்பு ஜிர்கான் படிகங்கள் (terrestrial zircon crystals), 4.404 பில்லியன் (நானூற்று நாற்பது கோடியே நாற்பது லட்சம்) ஆண்டுகள் பழைமையானவை; இதன் மூலமும் பூமியின் தொன்மையை உறுதிப்படுத்த முடிகிறது.

புத்தாண்டின் தொடக்கம்: ‘புத்தாண்டு’ என்ற சொல் ஒரு தனித்துவமான மனித கண்டுபிடிப்பாகும்; இது கோள்களின் (Planets) சுழற்சிகளைவிட நாம் பயன்படுத்தும் காலண்டர்கள் மற்றும் கலாச்சார தாளங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பூமியின் புத்தாண்டுப் பயணங்களை அதன் தொடக்க காலத்திலிருந்து நாம் கற்பனை செய்து கணக்கிட்டால், அதன் ஆரம்பகால கொண்டாட்டங்கள் ஏறக்குறைய 3.5 பில்லியன் (350 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகளின் (microorganisms) பிறப்பின் மூலம் தொடங்கபட்டன.

இந்த உயிரினங்கள் கடல்களில் செழித்து வளர்ந்து மனிதர்களைப்போல் தாவரங்கள், விலங்குகள் என்று பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு (evolution) வழிவகுத்தன. இப்படி கடந்த சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்த மனித நாகரிகம் புத்தாண்டை ஒரு கொண்டாட்டமாக மாற்றியது. இது மெசபடோமியாவில் சடங்குகள் (rituals in Mesopotamia), ரோமானிய விழாக்கள்(Roman festivities) என்று தொடங்கி; இப்போது வாணவேடிக்கைகள் மூலம் உலகம் முழுக்க சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது.

பூமியின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் ஒவ்வொரு புத்தாண்டும் வாழ்வின் மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இப்படி ஒரு நுண்ணுயிர் (Microorganism) இருப்பிலிருந்து தொடங்கிய இந்தப் பயணம், இப்போது மனித சமூகங்களில் 'கொண்டாட்டமாகவும், கலாச்சார வெளிப்பாடாகவும்’ பரிணாம வளர்ச்சி(Evolution) அடைந்திருக்கின்றன.

பூமிக்கு எது கடைசி புத்தாண்டாக இருக்கலாம்?: பூமியின் 'கடைசி புத்தாண்டு' பற்றிய கணிப்புகள் பொறுத்தவரை அறிவியல் இப்போதுவரை எந்த உறுதியான காலக்கெடுவையும் வழங்கவில்லை. பாபா வங்கா (Baba Vanga) போன்ற கலாச்சார ஆளுமைகள் 2026-ல் பேரழிவு நிகழ்வுகள் பற்றி ஊகித்திருந்தாலும், பிரதான அறிவியல், பூமியின் நீண்ட ஆயுளை உறுதிப்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
உலகில் புத்தாண்டை வரவேற்கும் நாடுகள் எந்தெந்த நேரங்களில் தெரியுமா?
happy new year

விண்வெளியில் நிகழும் சூரிய மாற்றங்கள் (solar changes) நிலைமைகளைப் பாதகமாக்கும் வரை, பூமி குறைந்தது இன்னும் பல பில்லியன் (பல நூறு கோடி) ஆண்டுகளுக்கு வாழக்கூடியதாக இருக்கும் என்று வானியலாளர்கள் (Astronomers) கணிக்கின்றனர். இவ்வாறு மனிதகுலம் பூமியின் முடிவுகளைப் பற்றி சிந்தித்தாலும்; பூமி தனது பயணத்தை இந்த பிரபஞ்சத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com