உலகில் புத்தாண்டை வரவேற்கும் நாடுகள் எந்தெந்த நேரங்களில் தெரியுமா?

Countries that welcome the New Year
New Year - 2025
Published on

லகம் முழுவதும் 2025ம் ஆண்டு புத்தாண்டினை மகிழ்ச்சியுடன்  வரவேற்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

உலகில் வெவ்வேறு நாடுகளிலும் வெவ்வேறு நேரங்களில் புத்தாண்டை கொண்டாடத் தொடங்கும்.

பசிபிக் பெருங்கடலின் நடுவில் வடக்கிலிருந்து தெற்கே 180வது மெரிடியனைப்பின் தொடர்கிறது. கிரீன்விச் அதாவது பிரிட்டன் நாட்டின் கிரீன்விச் என்ற பகுதியை மையமாக வைத்து உலகம் முழுவதும் நேரம் கணிக்கப்படுகிறது. அதனால்தான் இந்த நேர மாறுபாடுகளில்  புத்தாாண்டு பிறக்கிறது.

முதன் முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு.

பசிபிக் பகுதியில் அமைந்துள்ள தீவுகள்தான் புத்தாண்டை முதன் முதலில் வரவேற்கும். கிரிமதி தீவு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள மக்கள் வசிக்காத தீவுகளில் தான் புத்தாண்டு முதலில் வரும். கிரிப்டி என்ற நாடு மொத்தம் 33 தீவுகள் உள்ளது.

அதில் உள்ள கிரிமதி தீவுதான் முதலில் புத்தாண்டை கொண்டாடும்.

அதன் பின்னர் டோங்கா உள்ளிட்ட தீவுகளில் புத்தாண்டு வரும்.

இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு தொடங்கிவிடும்.

அதைத் தொடர்ந்து ஓசியானியா நாடுகளில் வரும்.

அதன் பின் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, ஐரோப்பியா, ஆப்ரிக்க நாடுகளில் புத்தாண்டு வரும்.

அதன் பின் அமெரிக்காவிலும், புத்தாண்டை கடைசியாக வரவேற்கும் பகுதி தென் பசிபிக் பகுதியில் உள்ள நியூ மற்றும் அமெரிக்கன் சமோலா தீவுகள் ஆகும். பேக்கர் தீவு, ஹவ்லேண்ட் தீவில் இதன் பிறகுதான் புத்தாண்டு வரும். ஆனால் இங்கு மக்கள் யாரும் இல்லை.

இதையும் படியுங்கள்:
2025 புத்தாண்டு முதல்... இப்படிச் செய்தால் என்ன?
Countries that welcome the New Year

இந்திய நேரப்படி ஜனவரி 1-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குத்தான் இங்கு புத்தாண்டு வரும்.

பசிபிக் தீவுகளில் இந்திய நேரப்படி 31-ம் தேதி பிற்பகல் 3.30 மணி.

இவர்களுக்கு அதிகாலை 12. மணி ஆகும். உலகிலேயே முதலில் புத்தாண்டு வருவதால் சற்று ஆடம்பரமாக, லேசர் விளக்கு,வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டும்.

நியூசிலாந்தில் இந்திய நேரப்படி 31-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புத்தாண்டு ஆரம்பம்.

இங்கிலாந்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணி என்றால் அங்கு புத்தாண்டு நேரம் வந்து விடும். 5.30 மணி -ரஷ்யா ஒரு பகுதி.

 6.30 மணி  -   ஆஸ்திரே லியாவின் மெல்போர்ன், சிட்னி, கான்பெரா 1 ஹோனியாரா.

7 மணி - அடிலைடு, புரோக்கன் ஹில்,

7.30 மணி - பிரிஸ்பேன், போர்ட், மோர்ஸ் பை, ஹகத்னா.

8 மணி - டார்வின், அலைஸ் (ஸ்பிரிங்ஸ், டெனண்ட் கிரீக் .

8.30. மணி - ஜப்பான், தென் கொரியாவின் டோக்யோ, சியோல், பியாங்யாங்க், டிலி, நெருல் மட்.

9.30 மணி - சீனா, பிலிப்பைன்ஸ்.

10.30 மணி. -- இந்தோனேசியா, தாய்லாந்து.

11 மணி - மியான்மர்.

11.30 மணி - வங்க தேசம்.

11.45 மணி - காட்மண்ட், பொக்காரா, பிரட்நகர், டாரன்.

12 மணி - இந்தியா, இலங்கை.

12.30. மணி - பாகிஸ்தான்.

1. மணி - ஆப்கானிஸ்தான்.

இதையும் படியுங்கள்:
இனிய இல்லறம் ஆலயம் ஆகட்டும்!
Countries that welcome the New Year

ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர்.

இனிய    2025 ம் ஆண்டு பிறக்கும் புத்தாண்டை  இனிமையதாகவும், நல்ல முறையில் அமையவும் இறைவனை வழிபட்டு அருள் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com