டிசம்பர் 2 - தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் - விழித்திடுவோம் மக்களே!

டிசம்பர் 2 - தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்
டிசம்பர் 2 - தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்
Published on

இன்று தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம். மக்களிடையே விழிப்புணர்வு தேவை.

மக்களிடம் மாசுபாட்டால் ஏற்படும் தீங்கு, அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1984-ம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதியன்று போபால் நகரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும், பலர் பாதிக்கப்பட்டனர். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் சந்ததியினர் இன்றளவும் உடல்ரீதியாக பல பாதிப்புகளை சந்தித்தும் வருகின்றனர். இந்த சம்பவம் அப்போது உலக அளவில் பெரும் சோகமாகக் கருதப்பட்டது. இந்த சோக சம்பவத்தை நினைவு கூறும் வகையிலும், மாசை கட்டுக்குள் கொண்டுவந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும்தான் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2-ஆம் தேதி (இன்று) தேசிய மாசு கட்டுப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மாசுபாடு என்பது மனிதர்களுக்கும், இயற்கை சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அனைத்தும் எளிதாகி வருகிறது.

ஆனால், அவைகளால் உண்டாகும் மாசு, பூமிக்கும், மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள், தாவரங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை சூழலுக்கும் பெரும் கேடு விளைவித்து வருகிறது. இறுதியில் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் உயிருக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது, மாசுபாட்டின் முக்கிய வகைகளாக காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் நில மாசுபாடு ஆகியன உள்ளன. காற்று மாசுபாடு என்பது வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் ஏற்படும் புகையால் வளிமண்டலம் மாசடைவது.

இதையும் படியுங்கள்:
ஒரே பாய்ச்சலில் இரையைக் கொல்லும் ஜாகுவார்களின் 8 தனித்துவப் பண்புகள்!
டிசம்பர் 2 - தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்

ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற நச்சுப் பொருட்கள் நீர்நிலைகளில் கலக்கப்படுவதால் நீர் மாசுபடுகிறது. திட மற்றும் திரவ கழிவுகள், மண் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்துவது நில மாசுபாடு ஆகும். இந்த மாசுபாடு வகைகளால் புவி வெப்பமடைதல், ஓசோன் படலத்தில் சிதைவு, சுற்றுச்சூழல் சீர்கேடு, காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்களுக்கு சுவாச நோய், சரும நோய், புற்றுநோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

எனவே, மாசுபாட்டை கட்டுக்குள் வைக்காவிட்டால் வருங்கால சந்ததியினர் வாழ பூமி தகுதியற்றதாக மாறிவிடும். இயற்கை வளங்கள் மிச்சம் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டு விடும்.

எனவே, இதனை மனிதர்கள் உணர்ந்து மாசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு மனிதர்களின் பங்கும் அவசியம். அதன்படி, தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள், புகை வெளியேற்றுவதை தடுப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை குறைத்தல், காட்டுத்தீ ஏற்படுவதை தடுத்தல், அதிக அளவு நச்சு புகைகளை வெளியிடும் எந்திரங்கள் மற்றும் வாகனங்கள் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட மாசு ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், சாதனங்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com