டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது: ஏ.கே. 47 துப்பாக்கி பறிமுதல்!

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது: ஏ.கே. 47 துப்பாக்கி பறிமுதல்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தலைநகர் டெல்லியிலுள்ள லக்ஷ்மி நகர் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து ஏ.கே .47 துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு அதிகாரி கூறியதாவது:
இன்று டெல்லி, லக்ஷ்மி நகரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். அவன் இந்திய நாட்டவருக்கு உண்டான போலி அடையாள அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடமிருந்து ஒரு கையெறி குண்டு, ஏகே 47 துப்பாக்கி, மற்றும் இரு சாதாரண கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப் பட்டுள்ளன. அவன்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com