மனதையும், உடலையும், பண்படுத்தும் பயணங்களின் எண்ணற்ற நன்மைகள் தெரியுமா?

செப்டம்பர் 27- உலக சுற்றுலா தினம்!

World Tourism Day!
tour...
Published on

யணங்கள் மனதை விரிவுபடுத்துவதாகவும், பிற ஊர்கள், நாடுகள், அங்குள்ள மக்களின் கலாச்சாரங்களை தெரிந்து கொள்வதற்குமான ஒரு அருமையான வாய்ப்பு. பயணங்கள் நமது சொந்த உலகத்தை விரிவு படுத்துகின்றன. மாதத்தில் ஒருநாள் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது அருகில் உள்ள இடங்களுக்கு குடும்பத்தினர்கள், நண்பர்கள் உடன் சென்று வருவது மனதிற்கு ஆரோக்கியத்தை தரும். சுற்றுலா சென்றுவருவதன் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சுற்றுலா செல்வதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள்;

சுற்றுப்பயணங்களில், புதிய இடங்களை சுற்றி பார்க்கும் போது அடிக்கடி நடக்க வேண்டி வரும். கோயில் போன்ற இடங்கலளில் நீண்ட பிரகாரங்களை சுற்ற வேண்டும். இந்த நடைப்பயிற்சி, உடல் செயல்பாட்டின் அளவை அதிகரித்து ஆற்றலை மேம்படுத்தும்.

மலைப்பிரதேசங்கள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது உயரமான இடங்களில் ஏறவேண்டும். பசுமையான சூழலில் சுத்தமான காற்றை அனுபவித்தபடி இயற்கை அழகு கொஞ்சும் இடங்களை பார்க்கும் போது மனதில் அமைதியை தோற்றுவித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். உடலில் ஆக்சிஜனேற்றத்தை அதிகரித்து மனச்சோர்வை குறைக்கும். உடல் புத்துணர்ச்சியுடன் திகழும்.


World Tourism Day!
tourist places

பயணங்களின் மனரீதியான நன்மைகள்;

இயற்கைக் காட்சிகளை கண்ணுற்றும்போது, அது வழக்கமான அலுவலகம், வீடு போன்ற சலிப்பூட்டும் நிகழ்வுகளில் இருந்து மாறுபட்டு கண்களுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியைத் தரும். புதிய அனுபவங்களையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் பயணங்கள் தரும். புதிய இடங்களையும் கலாச்சாரங்களையும் ஆராய்வது ஒருவரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும். புதிய யோசனைகளைத் தூண்டும், அறிமுகம் இல்லாத சூழல்கள் மனதிற்கு ஒருவிதமான அமைதியை தரும். மனம் தெளிவாக இருக்கும் அந்த சூழ்நிலையில் வாழ்க்கையில் எடுக்க நினைத்திருக்கும் சிக்கலான பிரச்னைகளுக்கான தீர்வுகள் கூட கிடைக்கக்கூடும்.

ஆன்மாவுக்கு கிடைக்க கூடிய நன்மைகள்;

சுற்றுப்பயணங்கள் சாகச மற்றும் உற்சாக உணர்வை அளிக்கும். இது ஆன்மாவிற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும். பொதுவாக பயணங்கள் இயற்கையுடனான தொடர்பு மற்றும் இயற்கையில் நேரத்தை செலவிடுவது போன்ற செயல்களை உள்ளடக்கியது. இவை அனைத்தும் ஆன்மாவிற்கு அமைதி மற்றும் நேர்மறை உணர்வுகளை தரும்.

கலாச்சார செறிவூட்டல்;

புதிய கலாச்சாரங்களை ஆராய்வது மற்றும் வெவ்வேறு மக்களின்  பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி அறிந்து கொள்வது உலகத்தைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதுடன் அங்கு வாழும் புதிய மனிதர்களை பற்றிய அறிமுகமும் கிடைக்கும். புதிய நபர்களுடன் தொடர்புகள் உருவாவதுடன் சமூக பிணைப்புகளையும் வலுப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் பார்த்து ரசிக்க வேண்டிய சிறந்த மலைவாச ஸ்தலங்கள்!

World Tourism Day!

சாதனை உணர்வு;

ஒரு சுற்றுப்பயணத்தை  நல்லபடியாக முடிப்பது என்பது வழியில் காணக்கூடிய பலவித அனுபவங்கள், சவால்கள், சிரமங்களை எதிர்கொண்டு அவற்றை மீண்டு வரும்போது ஒரு விதமான சாதனை மற்றும் பெருமை உணர்வை அளிக்கும். இது ஒருவரின் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையும் அதிகரிக்கும். மொத்தத்தில் சுற்றுப்பயணம் செல்வது நமது உடல், மனம் ஆன்மாவை உற்சாகப்படுத்தும் ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும்.

சுய பிரதிபலிப்பு;

ஸ்டீரியோடைப்பிக்காக இருக்கும் வழக்கமான வேலைகள் மற்றும் இடத்திலிருந்து வெளியேறி புதிய விஷயங்களை காண்பதற்கும் புதிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் ஒரு வாய்ப்பாக பயணங்கள் இருக்கின்றன. இவை மனிதர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய பிரதிபலிப்புக்கான வாய்ப்புகளை வழங்குகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com