உலகின் மகிழ்ச்சியான மொழி எது தெரியுமா?

பிப்ரவரி 21: உலக மொழிகள் தினம்!
உலக மொழிகள் தினம்
உலக மொழிகள் தினம்nationaltoday.com 

ன்றைய காலகட்டத்தில் உலகில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. மொழிகளின் உண்மையான தொடக்கம் 50000 ஆண்டுகளுக்கு முந்தைய காலமாக இருக்கலாம் என்கிறார்கள். மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் பாதையில் மொழி ஒரு மூலக்கல்லாக செயல்படுகிறது. மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் மேற்கொள்ளும் தொடர்பு, சுய வெளிப்பாடு, மனிதனின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைப் பாதுகாக்க மொழி உதவுகிறது.

உலகின் மிக பழமையான மொழி எது தெரியுமா...! ஆஃப்ரோ - ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு.2600 ஆண்டில் உருவாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொழியின் முதல் வசனம் கி.மு.2690 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. எகிப்திய மொழி சுமார் 4 ஆயிரத்து 700 ஆண்டு பழமை வாய்ந்த மொழியாக காணப்படுகிறது.

உலகிலுள்ள பிரபலமான மொழிகளில் ஆற்றல்மிக்க மொழி எது? என்பதை கண்டறிய ஒரு மொழி எந்தளவுக்கு புவியியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, தகவல் தொடர்பு ரீதியாக, பொது அறிவு மற்றும் ராஜ்ய உறவு ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதற்கு மதிப்பெண்கள் கொடுத்து ஆய்வு செய்ததில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த பவர்ஃபுல் மொழி ஆங்கில மொழிதான்.

உலகின் மிகவும் மகிழ்ச்சியான மொழியாக ஸ்பானிஷ் மொழி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகின் டாப் 10 மொழிகளில் உள்ள 10000 வார்த்தைகளை எடுத்துக்கொண்டு மிக நீண்ட ஆய்வுக்குப்பின் கண்டறிந்த உண்மை இது. கற்பதற்கு எளிதாக உள்ள ஸ்பானிஷ் மொழியில்தான் மிக அதிகமாக நேர்மறையான ‘பாசிட்டிவ்’ வார்த்தைகள் உள்ளதாம். இதனையடுத்து போர்ச்சுகல், இங்கிலீஷ், இந்தோனேசியா, பிரெஞ்சு, ஜெர்மன், அரபிக், ரஷியன், கொரியன் மற்றும் சீன மொழிகள் உள்ளன.

உலகிலேயே மிக வேகமாக பேசக்கூடிய மொழி ஜப்பானிய மொழிதான். இந்த மொழியில் ஒரு நிமிடத்தில் 782 வார்த்தைகள் பேச முடியும். இதனையடுத்து ஸ்பானிஷ் மொழியில் 780 வார்த்தைகளையும், பிரெஞ்சு மொழியில் 718 வார்த்தைகளையும் பேச முடியும். ஆங்கிலத்தில் 220 வார்த்தைகளை மட்டுமே பேச முடியும்

உலகின் பழமையான மொழிகளின் வரிசையில் கிரேக்கம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவில் கிரேக்க மொழி உருவாகியுள்ளது. சமஸ்கிருதத்தை போன்று கிரேக்க மொழியும் தற்போது 3 ஆயிரத்து 500 வருட பழமை வாய்ந்த மொழியாக காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த வாரம் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசாகிறதா? என்னென்ன படங்கள் தெரியுமா?
உலக மொழிகள் தினம்

சீன மொழி கி.மு.1250ஆம் ஆண்டளவில் உருவாகியுள்ளது. மூவாயிரத்து 300 ஆண்டுகள் பழமையான இந்த மொழி, பல ஆண்டுகளாக நடைமுறையிலேயே இருக்கும் மொழியாக கருதப்படுகிறது. சீனாவில் தற்போது மண்டரின் மற்றும் கான்டோனீஸ் எனும் மொழிகள் பயன்படுத்தப்பட்டாலும் அதிகளவான மக்களால் சீன மொழி பயன்படுத்தப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மொழி சீனாவின் அதிகாரப்பூர்வமான மொழியான மாண்டிரிபன் மொழிதான். இதனை 960 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பேசுகிறார்கள். இதனையடுத்து ஆங்கில மொழியை 446 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பேசுகிறார்கள். ஆங்கில மொழியை பேச இடது புற மூளை மட்டுமே வேலை செய்யும். ஆனால், சீன மொழியை பேசும்போது வலது மற்றும் இடது புற மூளை இரண்டுமே வேலை செய்யும்.

ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான அரபு மொழிதான் உலகின் ‘செழுமையான மொழி'. உலகின் எந்த மொழியின் கலப்பு இல்லாமல் இருப்பதே இதன் தனித்தன்மை. இந்த மொழியில் அதற்கு சொந்தமான வார்த்தைகள் மட்டும் 12.3 மில்லியன் என்கிறார்கள். ஆனால், உலகின் பல்வேறு மொழிகளில் அரபு மொழி கலப்பு உள்ளது. உதாரணமாக ஆங்கிலத்தில் உள்ள ஆல்கஹால், அல்ஜிப்ரா, ஜாஸ்மின். தமிழில் உள்ள வாரிசு, வசூல், மசோதா மற்றும் மகஜர் போன்றவைகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com