வரம் தரும் அன்னையே... வணங்கினோம் உன்னையே!

ஸ்ரீ அன்னையின் பிறந்தநாளான 21.02.26 அன்று வரம் தரும் அவரை வேண்டி வணங்குவோம். அருள் பெறுவோம்.
Sri Aurobindo Mother
Sri Aurobindo Mother
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

1878 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி பிரஞ்சு நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர் மிர்ரா அல்ஃபசா என்கிற பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை. மகான்கள் என்றாலே பொதுவாக மக்களை வழி நடத்துபவர்கள் தான். அதிலும் ஸ்ரீ அன்னை மிக உயர்வான நேர்மறை சிந்தனைகளை நம்முள் விதைத்து மனித குலத்தை உயர்த்தவே அவதாரம் எடுத்தவர். நம் மனதில் ஒவ்வொரு உணர்ச்சியும் உருவாகி அவை வெளிப்படுவதற்கு முன்பு மனதிற்கு ஒரு காவற்காரரை நியமித்து நல்லதை உள்ளே இருத்தி வேண்டாததை வெளியே தள்ளி விடவேண்டும். எண்ணமும் பேச்சும் எப்பொழுதும் நேர்மறையாகவே இருக்க வேண்டும்.

நம் பேச்சு தான் நம் மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. பேச்சு என்னும் அற்புதமான சக்தியை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பேச்சின் அருமை தெரிந்து இதனை பயன்படுத்த வேண்டும். பேச்சு எவ்வளவு குறைவாக இருக்குமோ அவ்வளவுக்கு அதன் சக்தி அதிகமாக இருக்கும். நாம் அதிகமாகப் பேசும்போது நம்மையறியாமல் பேச்சில் பொய்கள் நிறைய வந்துவிடும். அந்த காலத்தில் ரிஷிகள் வாக்கு பலித்ததற்குக் காரணம் அவர்கள் பொய் பேசாதிருந்தது தான். உண்மையே பேசுவது என்பது ஒரு தவத்திற்கு ஈடாகும்.

மலர்களைப் பற்றி தான் எவ்வளவு அருமையான தகவல்களை ஸ்ரீ அன்னை கூறியுள்ளார்?

அன்னைக்கு சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மலரும் தனக்குரிய குணத்தை சமர்ப்பித்தவருக்குப் பெற்றுத் தருமாம். வேப்பம்பூ இனிமையையும், எருக்கம்பூ தடைகளை உடைக்கும் தைரியத்தையும், துளசி பக்தியையும், நாகலிங்கப்பூ வளமையையும், வாடாமல்லி என்றும் அழியாத்தன்மையையும் தரும். ரோஜா மலர்கள் நமக்குப் பெருமையையும் கௌரவத்தையும் பெற்றுத் தரும். நாம் அலட்சியமாக காகிதப்பூ என்று ஒதுக்கும் குரோட்டன்ஸ் மலரை அன்னைக்கு சமர்ப்பித்தால் பூரண பாதுகாப்பை நமக்கு அது பெற்றுத் தரும்.

இதையும் படியுங்கள்:
அந்த 'கடைசி' நொடியில் மிஞ்சுவது எது? ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லும் சூத்திரங்கள்!
Sri Aurobindo Mother

ஸ்ரீ அன்னையின் கருணை அளப்பரியது.

மனிதர்கள் மீது மட்டும் அவர் கருணை காட்டவில்லை. விலங்குகள், மரங்கள் போன்றவற்றின் மீதும் கருணையோடு அருள் புரிந்தார். பாண்டிச்சேரியில் ஆசிரமத்தில் வயதான மாமரம் ஒன்று இருந்தது. அது மிகவும் பரந்து இடத்தை அடைத்துக் கொண்டிருந்ததால் அருகே மற்ற மரம், செடி கொடிகள் வளர முடியவில்லை. அதனால் அதை வெட்டி விட வேண்டுமென்று ஆசிரம காப்பாளர் நினைத்தார். மறுநாள் ஸ்ரீ அன்னையிடம் இதற்கு உத்திரவு வாங்க சென்றபோது ஸ்ரீ அன்னை அவரை அந்த மரத்தை வெட்ட விடாமல் தடுத்து விட்டார். மரத்தில் வாழ்ந்து வந்த ஒரு தேவதை அந்த மரத்தை வெட்ட வேண்டாமென்று நேற்றிரவு தன்னிடம் கேட்டுக் கொண்டபடியால் அதை வெட்ட வேண்டாமென்று கூறினார். அந்த அளவுக்குக் கருணை உள்ளம் ஸ்ரீ அன்னைக்கு.

மென்மைக்கு உதாரணமாக மலர்களைச் சொல்வோம். மலரினும் மென்மையானவர் அன்னை. ஸ்ரீ அன்னையின் பூத உடல் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டு விட்ட போதிலும், இன்றும் சூட்சும ரூபத்தில், சமாதியிலும் ஆசிரமத்திலும் புதுவையைச் சுற்றி வெளியிலும், பக்தர்கள் உள்ளத்திலும், வாழ்விலும் நிரந்தரமாகச் செயல் புரிந்து கொண்டிருக்கிறார். அன்னையைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை. மானசீகமாக மனதார வணங்கி அவரை அழைத்தால் ஸ்ரீ அன்னையே நாம் இருக்குமிடம் தேடி வருவார். வரம் தருவார். அருள் புரிவார்.

ஸ்ரீ அன்னையின் பிறந்தநாளான 21.02.26 அன்று வரம் தரும் அவரை வேண்டி வணங்குவோம். அருள் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com