"மக்களால் நான், மக்களுக்காகவே நான்!" - இரும்புப் பெண்மணி ஜெயலலிதா அம்மாவின் சாதனைப் பயணம்!

பிப்ரவரி 24: ஜெ. ஜெயலலிதா பிறந்தநாள்!
J. Jayalalithaa
J. Jayalalithaa
Updated on

தலைசிறந்த திரைப்பட நடிகை, ஆகச்சிறந்த அரசியல்வாதி, ஆளுமை மிக்க முதலமைச்சர், நல்ல நிா்வாகத்திறன் கொண்ட இந்தியாவின் இரும்புப்பெண்மனி, மகளிா் குல மாணிக்கம், பலமொழிகற்று பாா்போற்ற ஆட்சிசெய்த ஆயிரத்தில் ஒருத்தி, அம்மா உணவகம் தந்து ஏழைகளின் பசிப்பிணி போக்கிய அண்ணபூரனி, துணிச்சலுக்கு பெயர் போன தன்னிகரற்ற தலைவி, பன்னாட்டு மனித உாிமைக்கான உக்ரைனின் விருது பெற்ற தங்கத்தாரகை, தாலிக்கு தங்கம் தந்த தரம் குறையா தானைத்தலைவி, புரட்சித்தலைவி, அகிலமே அம்மா என அழைத்திட்ட அறநெறியாளினி, பெண் உாிமைக்கான முன்னேற்றத்திற்காக நல்ல பல திட்டங்களை தந்த தசாவதாரம், ஆறுமுறை தமிழக முதல்வராய் அாியணை ஏறிய அருந்தவச் செல்வி, கலைமாமனி விருது பெற்ற கலைக்களஞ்சியம் அனைத்து மகளிா் காவல் நிலையம் தந்த நல்லதொரு நிா்வாகி இப்படி வானளாவிய புகழ் பெற்ற ஜெயராமன் வேதவல்லி ஜெயலலிதா (J. Jayalalithaa) எனும் வீரமங்கையின் பிறந்தநாள் பிப்ரவரி 24ல் அவரது நிா்வாகத்திறனை போற்றிடுவோம்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், பாண்டவபுரம் மேலக்கோட்டை ஜெயராமன் இணையர் வேதவல்லியின் புதல்வி ஜெயலலிதா பள்ளிப்படிப்பில் முதலிடம் பிடித்த புத்திசாலியான மானவி, சர்க்பாா்க் பள்ளியில் மெட்ரிக் படித்தாா்.

குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்தில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாகி எம்.ஜி.ஆருடன் பலபடங்களில் நடித்து புகழ் பெற்ற வேளையில், 1982ல் கடலூாில் எம்.ஜி.ஆா் துவக்கிய அ.தி.மு.கவில் அரசியல் கள வாழ்வைத் துவங்கி, 1982ல் கொள்கைப்பரப்பு செயலாளராய் வலம் வந்து, 1984ல் மாநிலங்களவையின் உறுப்பினராகி, ஆங்கிலப் புலைமையோடு தமிழக நலனுக்கு குரல் கொடுத்து, இந்திரா காந்தி அம்மையாரால் பாராட்டப்பட்ட புலமை பெற்றவர்.

எம்.ஜி.ஆா் அமொிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது தனது ஆற்றல் மிகு பேச்சால் அனைவரையும் கவர்ந்து, அ.தி.மு.கவின் தோ்தல் வெற்றிக்கனியை பறித்தவர். அதில் முத்திரையும் பதித்தவர் என்றே வரலாறு சொல்லும்.

எம்.ஜி.ஆாின் மறைவுக்குப்பின்னால் பிளவு பட்ட கட்சியை வளா்த்து தலைவியாகி புரட்சித்தலைவியாய் புகழ் பரப்பி 1991ல் தமிழக முதல்வரானாா், அதிலிருந்து இடைவெளிவிட்டு 2016 வரை மொத்தத்தில் ஆறுமுறை தமிழக முதல்வராய் சிறப்பாக நிா்வாகம் செய்த நல்ல தொரு அரசியல்வாதியாய் வலம் வந்து ஆட்சி செய்து  பலராலும் பாராட்டப் பெற்றவர். இருப்பினும் சில வழக்குகளால் சிறை செல்லவும் நோிட்டது.

இதையும் படியுங்கள்:
தங்கத்தாரகை ஜெயலலிதா பிறந்தநாள் ஸ்பெஷல்!
J. Jayalalithaa

பெண் சிசுக்கொலை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம்,  அம்மா உணவகம், மழைநீா் சேகரிப்பு திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், சந்தனக் கடத்தல் வீரப்பனை சாமர்த்தியமாய் அழித்தது போன்ற திட்டங்கள் இவரது தலைசிறந்த நிா்வாகத்திற்கு சான்றாகும்.

அதேபோல மின்சார உற்பத்தில் தன்னிறைவு கண்டு மின் மிகை மாநிலமாக மாற்றிய மிகப்பொிய பெருமைக்கு சொந்தமானவர் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, வழங்கினாா்.

பெண்கள் உரிமைக்காக போராடி அவர்களது முன்னேற்றம் தனை கருத்தில் கொண்டு அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைத்த பெருமைக்குாியவர்.

அதேபோல முதல் பெண் போலீஸ் கமான்டோக்கள் பிாிவை துவக்கினாா், லாட்டரி ஒழிப்பினை மேற்கொண்டாா், கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையில் புரட்சிகள் செய்தவர், சிறப்பு முனைவர் பட்டத்தை 1991ல் சென்னை பல்கலைக்கழகம் வழங்கி கெளரவித்தது.

இப்படி சிறப்பானதொரு நிா்வாகம் செய்து 'மக்களால் நான் மக்களுக்காக நான்' என மேடைகளில் முழங்கிய ஐெயலலிதா எனும் மக்கள் முதல்வர் ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு பல நாட்கள் மருத்துவசிகிச்சை பெற்று வந்த நிலையில் 05.12.2016ல் காலமானாா்.

மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்த ஜெயலலிதா அம்மாவின் புகழை வரலாறு கூறும்.

logo
Kalki Online
kalkionline.com