
‘ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது’ என்ற திரைப்பட பாடல் ஒன்றை பலரும் கேட்டிருப்போம். தபால் பட்டுவாடா செய்யும் ஒருவர் பாடுவது போல் இப்பாடல் அமைந்திருக்கும். அந்தப் பாடல் வரிகளைப் போல் ஒருவர் மனதில் உள்ள அனைத்து விதமான தகவல்களையும் அஞ்சல் சேவையில் அஞ்சல் அட்டையில் தொிந்துகொள்ள உதவும் பொிய சேவையே தபால் துறையின் பணியாகும். அந்த சேவை தபால் துறையின் மிகப் பொிய நெட்ஒர்க் ஆகும்.
அஞ்சல் துறை இந்தியா முழுமைக்கும் பரவி, பலவித சேவைகளை செய்து வருகிறது. உலக அஞ்சல் துறையின் உன்னதமான சேவையை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9ம் நாள் உலக அஞ்சல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1874ம் ஆண்டு சர்வதேச அஞ்சல் ஒன்றியம் (Universal postal union) துவக்கப்பட்டது. அதன் பிறகு அதன் நினைவாக 1969ல் உலக அஞ்சல் தினம் நடைமுறைக்கு வந்தது. உலக அஞ்சல் துறையின் சேவையை அங்கீகரிப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
கடிதம் எழுதும் நோக்கமானது பல்வேறு கிராமங்களையும், நகரங்களையும் இணைக்கும் பாலமாக அமைகிறது. ஒரு அஞ்சல் அட்டையில் அத்தனை விஷயங்களையும் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா விஷயங்களையும் அறிய முடியும். அந்த வகையில் அருமையான பணியே அஞ்சல்துறைப்பணியாகும்.
இதில் துரித தபால், ரிஜிஸ்டர் தபால், கார்டு, கவர், தபால் வில்லை, தந்தி சேவை, மணியாா்டர், குறுகிய கால சேமிப்பு, தொடா் வைப்பு, வங்கிகளை விட கூடுதல் வட்டி இப்படி பல்வேறு சேமிப்புத் திட்டங்கள், 5 ஆண்டுகள் தொடங்கி பல நிலைப்பாடுகளில் வைப்புத்தொக, சேமிப்புத் திட்டம், ஆதாா் காா்டு பணி இப்படி அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதுபோலவே, அஞ்சலக இன்ஸ்யூரன்ஸ் சேவை மிகப் பொிய பங்கு வகிக்கிறது.
வெளிநாடுகளுக்கு தபால் சேவை மற்றும் கிராமங்கள் தோறும் கிளை அஞ்சலகம் இப்படி அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்டமான சேவையை செய்து வருகிறது. காலத்திற்கேற்ப ஏடிஎம் சேவையை பரிபூரணமாக செய்து வருவதில் வங்கிகளை விட அஞ்சலக சேவை தனது சீாிய பணியை சிறப்பாக செய்து வருவது பெருமையே! பொதுமக்களும் அஞ்சலக சேவையை அதிக அளவில் ஆா்வத்தோடு உபயோகித்து வருகிறாா்கள்.
ஆக, மக்கள் அஞ்சலகப் பணியை நல்ல முறையில் தங்களை அதன் வழியில் ஈடுபடுத்திக்கொள்வதே சிறப்பானது. சேமிப்பே உயர்ந்த வழி. வங்கிகள் போலவே அஞ்சலகங்களும் சிறப்பான சேவையை செய்து வருகின்றன. ஆக, இந்த உலக அஞ்சலக தினத்தில் அஞ்சலகங்களோடு இணைவோம். சேமிப்புடன் கூடிய வாழ்க்கையை வாழ்வோம்.