Follow-up: மாதவிடாய் நேரத்தில் ஊருக்கு வெளியே தங்கும் சிறுமிகள்!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீ வெங்கடபிரியா
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீ வெங்கடபிரியா
Published on

-காயத்ரி.

பெரம்பலூர் அருகே.. இனாம் அகரம் என்ற கிராமத்தில் மாதவிடாய் சமயத்தில் அந்த 3 நாட்களுக்கு பள்ளிச் சிறுமிகள் உட்பட அனைத்து பெண்களும் ஊருக்கு வெளியே தங்க வைக்கப்படுவது பற்றி கல்கி ஆன்லைனில்  3 நாட்களுக்கு முன்பு கட்டுரை வெளியிட்டோம்.

 அந்த கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் காவல் தெய்வத்துக்கு பயந்து, சாமி குத்தம் என்று சொல்லி தம் வீட்டுப் பெண்களை ஊருக்கு வெளியே பொது இடம் ஒன்றில் தங்க வைத்து வருகிறார்கள். சறும் பாதுகாப்பில்லாத இந்த இடத்தில் தங்க நேர்வது குறித்து அந்த கிராம மாணவிகள் தங்கள் கவலைகளை பகிர்ந்தை அடுத்து நேரடி விசிட் செய்து கிராம பெண்களின் நிலை குறித்து விவரித்திருந்தோம்..

 கல்கி ஆன்லைனில் நமது செய்தி வெளியானதுமே, உடனடியாக  அதிரடி ஆக்ஷனில் இறங்கிவிட்டார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீ வெங்கடபிரியா. மறுநாளே தன்னுடன் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இனாம் அகரம் கிராமத்திற்கு நேரடி விசிட் செய்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அநத ஊர் பெண்களையும்.. மாணவிகளையும் ஊர் பொது இடத்தில் சந்தித்து, அவர்களுடன் தரையில் அமர்ந்து  பேசியிருக்கிறார்.

 அந்த பெண்களுக்கு தனி நபர் சுகாதாரம் (personal hygiene) குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.. மேலும் இந்த நவீன ஆண்ட்ராய்ட் உலகில்.. இன்னும் பழைய பொருந்தாத  மூட நம்பிக்கைகளை கடைபிடிக்க வேண்டுமா?  என்று கேள்வி எழுப்பிய ஆட்சியர் ஶ்ரீ வெங்கடபிரியா மிக பொறுமையாக பேசி.. அந்த வழக்கத்தை கைவிடுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

அகரம் கிராம மக்கள்
அகரம் கிராம மக்கள்

கலெக்டரின்.. விளக்கத்தை முதலில் ஏற்க மறுத்த அந்த ஊர் பெண்கள்.. வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் வெகு கூலாக கிராம மக்களை சமாதானப் படுத்தி, இப்படி ஊருக்கு வெளியே பாதுகாப்பற்ற இடத்தில் தங்க வைப்பதன் தீமைகளை பொறுமையாக விளக்கியுள்ளார். இதையடுத்து அந்த கிராம பெண்கள், தாங்கள் கூடிய விரைவில் இந்த நடைமுறைக்கு முடிவு கட்டுவதாக உத்தரவாதம் அளித்தனர்.

 இனாம் அகரம் கிராம மக்களின் இந்த முடிவை வரவேற்பதாக தெரிவித்த ஆட்சியர் வெங்கட பிரியா, அந்த கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

 இந்நிலையில் பெரம்பலூர் ஆட்சியர் ஶ்ரீ வெங்கட பிரியாஐ நேரில் சந்தித்து கல்கி சார்பில் நன்றி தெரிவித்தோம்..

 அதற்கு அவர் ‘’ நான் என் கடமையை தான் செய்தேன்... என் பேச்சுக்கு செவிமடுத்த அந்த கிராம மக்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்’’  என்று சிம்பிளாகச் சொல்லி முடித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com